அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஷியர்வாட்டர் ஹெல்த் (Shearwater Health) நிறுவனம், இந்தியாவில் தனது அலுவலகத்தைத் திறக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஹெல்த்கேர் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்நிறுவனம், சென்னையில் புதிய அலுவலகத்தைத் தொடங்க உள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் 1,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இருக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பும், திறமையான ஊழியர்கள் பட்டாளம் ஆகியவற்றின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக மாறியிருக்கிறது. இதுநாள் வரையில் டெக், பின்டெக், ஐடி சேவை, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் துறையில் தான் அதிகப்படியான அலுவலகங்கள் தமிழ்நாட்டில் அலுவலகத்தைத் திறந்தது. தற்போது இந்த பட்டியலில் ஹெல்த்கேர் துறையும் சேர்ந்துள்ளது சென்னை வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது.

சென்னையில் இருந்து செயல்படும் இந்த அலுவலகம், அமெரிக்காவில் உள்ள ஷியர்வாட்டர் ஹெல்த் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர ரிமோட் மருத்துவ சேவைகளை வழங்கும். இதற்காக திறமையான மருத்துவ நிபுணர்களை நியமித்து பயிற்சி அளிக்க உள்ளது.
ஷியர்வாட்டர் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் கெண்ட்ரோட் சென்னை அலுவலகம் திறப்பது குறித்து கூறுகையில், இந்தியாவில் விரிவாக்கம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
கிளினிக்கல் புராசஸ் அவுட்சோர்சிங் (CPO) துறையில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதன்மையாக உள்ளது. அங்கு ஷியர்வாட்டர் ஹெல்த் நிறுவனம் சுமார் 5,000 திறமையான ஊழியர்களை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் சென்னையில் விரிவாக்கம் செய்வது என்பது எங்களது உலகளாவிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் நன்கு நிறுவப்பட்ட அவுட்சோர்சிங் சந்தை மற்றும் சென்னையின் திறமையான தொழிலாளர் பணிபுரியும் சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்களது சொந்த பயிற்சி மற்றும் கல்வி தளங்களைச் சென்னையில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றும் டாம் கெண்ட்ரோட் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கிளினிக்கல் புராசஸ் அவுட்சோர்சிங் (CPO) மாடலை கொண்டு வந்த பெருமை ஷியர்வாட்டர் ஹெல்த் நிறுவனத்துக்கு உண்டு. இது காப்பீட்டு நிறுவனங்கள், முதல் மருத்துவமனை நிறுவனங்கள் வரையில், தொழிலாளர் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு சுகாதார நிறுவனங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பல்வேறு கிளினிக்கல் சொல்யூஷன்களை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications