சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முதலும் முக்கியமான காரணம் மாநிலம் முழுவதும் நிறைந்திருக்கும் திறமையான ஊழியர்கள் தான், இதனாலேயே எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் போதுமான ஊழியர்களும், இதன் மூலம் வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது.
இதன் அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பு பல முன்னணி நிறுவனங்கள் சென்னையில் அலுவலகத்தை திறந்தது போல் தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அலுவலகத்தை திறக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனாலேயே பெங்களூர், மும்பை, புனே, நொய்டா, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் பணியாற்றும் தமிழர்கள் கோயம்புத்தூர்-க்கு வர விருப்பம் காட்டுகின்றனர். இதேபோல் கடந்த 4 வருடத்தில் கோயம்புத்தூரில் ஐடி மற்றும் டெக் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Visteon Corporation கோயம்புத்தூரில் முதல் முறையாக அலுவலகத்தை திறந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான Visteon Corporation-னின் இந்திய கிளை நிறுவனமான Visteon டெக்னிக்கல் & சர்வீசஸ் சென்டர் கோயம்புத்தூரில்முக்கிய பகுதியாக இருக்கும் சரவணபட்டியில் அமைந்துள்ள இந்தியா லேண்ட் டெக் பார்க்-ல் புதிய டெக் சென்டரை திறந்துள்ளது.
இந்த அலுவலகம் முழுக்க முழுக் இன்ஜினியரிங் மற்றும் டிசைன் பிரிவின் ஐடி சேவை பிரிவாக இருக்கும் என இந்நிறுவனம் உலகளவில் வர்த்தகம் மற்றும் சேவை அளிக்கும் ஆட்டோமோட்டீவ் எலக்ட்ரானிக்ஸ் சப்ளையராக உள்ளது.

Visteon Corporation சுமார் 18 நாடுகளில் 40 இடத்தில் அலுவலகங்களை அமைத்து இயங்கி வருகிறது, இதில் இந்சியாவில் மட்டும் இதுவரையில் 4 அலுவலகங்களை வைத்துள்ளது. இந்த 4 அலுவலகம் பெங்களூர், சென்னை, கோவா, புனே ஆகிய நகரங்களில் உள்ளது. 5வது அலுவலகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
Visteon Corporation உலகளவில் வர்த்தகம் செய்யும் வேளையில் 2022 ஆம் ஆண்டு சுமார் 3.76 பில்லியன் டாலர் அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 10000 ஊழியர்கள் உள்ளனர். வாகனங்களுக்கான பல டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை Visteon Corporation அளிக்கிறது. இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக Sachin Lawande உள்ளார், இவர் இந்திய அமெரிக்கர் ஆவார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications