சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் அடைய வேண்டும் எனத் தமிழக அரசு டார்கெட் செய்துள்ள வேளையில், மத்திய அரசும் டஜிட்டல் துறையில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைய வேண்டும் என்று இலக்கை வைத்துள்ளது. இவ்விரண்டையும் ஆதரிக்கும் வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டர் நிறுவனங்களில் ஒன்றான Equinix Inc சென்னையில் பெரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் Equinix Inc நிறுவனம் தனது முதல் இண்டர்நேஷ்னல் பிஸ்ன்ஸ் எக்ஸ்சேஞ்ச் டேட்டா சென்டரை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்தியேக டேட்டா சென்டரை CN1 என அழைக்கப்படுகிறது, செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தும் நிறுவனங்கள் உட்பட, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஹைபர்ஸ்கேலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Equinix Inc நிறுவனம் இந்த CN1 டேட்டா சென்டருக்காக சுமார் 65 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும், இது சென்னையின் ஐடி சேவை பகுதியான சிறுசேரியில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த சிஎன்1 டேட்டா சென்டர், 2024 ம் ஆண்டின் கடைசி காலாண்டில் திறக்கப்பட உள்ளது.
மும்பையில் உள்ள ஈக்வினிக்ஸின் மூன்று உயர் செயல்திறன் டேட்டா சென்டர்களுடன் இணைக்கப்படும் சிஎன்1 டேட்டா சென்டர், இந்தியாவில் இன்னோவேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்த வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் சுற்றுச்சூழலையும் வழங்க உள்ளது.
மும்பையில் அதிக அளவில் கிளவுட் இணைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், OTT சேவை வழங்குபவர்கள், இண்டர்நெட் எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் பைனான்சியல் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட மிகப்பெரிய இணைப்பு கொண்ட டேட்டா சென்டர் வளாகத்தை Equinix Inc நிறுவனம் வைத்துள்ளது.
சென்னையில் உள்ள டேட்டா சென்டரை மும்பை டேட்டா சென்டர் வளாகத்துடன் சேர்ப்பது மூலம் சென்னை கட்டமைப்பு பெரிய அளவில் வலுமைப்பெறும். இது சென்னை டெக் சுற்றுச்சூழலையும், சென்னை டெக் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன் அளிக்கும். தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் ஐடி துறை, சிப்காட் மற்றும் கைடென்ஸ் தமிழ்நாடு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் Equinix Inc நிறுவனம் சென்னையில் அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications