யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராகச் செங்கடலில் (Red Sea) வர்த்தகக் கப்பல்களை டிரோன் மற்றும் ஏவுகணை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இதனால் பல கப்பல் நிறுவனங்கள் செங் கடல் வழித்தடத்தைப் பயன்படுத்தாமல் மாற்றுப் பாதை வழியாகச் சென்றுகொண்டு வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்தில் பயணக் காலம், செலவுகள் பெரிய அளவில் அதிகரித்து இப்போது பல பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் யெமன் நாட்டில் உள்ள ஹவுதி இயக்கத்துடன் தொடர்புடைய பகுதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன என்று நான்கு அமெரிக்க அதிகாரிகள் வியாழனன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இது கடந்த 2 மாதங்களில் செங்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொண்ட ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடுக்கப்பட்டு உள்ள முதல் தாக்குதல் இது.
ஹவுதி அதிகாரி ஒருவர், தலைநகர் சனா மற்றும் சாதா மற்றும் தாமர் நகரங்கள் மற்றும் ஹொடெய்டா மாகாணம் உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் ரெய்டுகள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தினார். இத தாக்குதல் மற்றும் ரெய்டுகளை ஹவுதி அமைப்பினர் American-Zionist-British aggression என அழைக்கின்றனர்.
ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன், சீனா - தைவான், இஸ்ரேல் - ஹமாஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து யெமன் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து யெமன் நாட்டின் தலைநகர் சனா உட்படப் பல இடங்களில் நேரடியாக அமெரிக்கா, பிரிட்டன் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய கிழக்குப் பகுதிகள் மீண்டும் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் பேசுகையில் விமானம், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஹவுதி இயக்கத்துடன் தொடர்புடைய பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனத் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் மற்றும் நெதர்லாந்து ஆதரவு அளித்ததாக இரண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 12க்கும் அதிகமாக இடங்களை யெமன் நாட்டிற்குள் சென்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஹவுதி படையைத் தாக்கியுள்ளது. யெமன் நாட்டின் பெரும் பகுதியை ஹவுதி படைகள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஹவுதி படைகள் செங்கடலில் செய்யும் தாக்குதலுக்கு ஆரம்பம் முதல் காசா ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக அறிவித்தது.


Click it and Unblock the Notifications