அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கும் வலிமைக்கும் எந்த அளவுக்கு டெக் துறை முக்கியமோ, அதே அளவில் அமெரிக்காவின் டெக் துறையின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மிகவும் முக்கியமானது ஹெச்1பி விசா.
உலகளவில் டெக் துறை வேகமாக வளர்ந்த காலம் என்றால் 1985 முதல் 2000 காலக்கட்டத்தில் தான், இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா உலகின் பிற நாடுகளை காட்டிலும் டெக் துறையில் வேகமாக வளர்ந்தது மட்டும் அல்லாமல் வலிமை அடைந்தது, இதற்கு முக்கியமான காரணம் ஹெச்1பி விசா என்ற ஆயுதம் 1990ல் ஜார்ஜ் H.W. புஷ் மாபெரும் கனவுடன் அறிமுகம் செய்தது தான்.

இந்த ஒரு விசா மூலம் உலகம் முழுவதும் இருக்கும் திறமையான டெக் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது, பின்னாளில் இந்த விசாவில் அமெரிக்கா வருவோரின் படித்த கணவன் மற்றும் மனைவிக்கு வழங்கப்பட்டது.
இப்படி படிபடியாக ஹெச்1பி விசா மூலம் மெருகேற்றிய அமெரிக்க டெக் துறைக்கு டிரம்ப் அறிவித்த ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் மிகப்பெரிய வரலாற்று முட்டுக்கட்டையாக இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களே குற்றம்சட்ட துவங்கியுள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான வர்த்தக அமைப்புகள் டொனால்டு டிரம்ப்-ஐ எச்சரித்துள்ளனர், புதிதாக ஹெச்1பி விசா மீது விதிக்கப்பட்டு உள்ள 1,00,000 டாலர் மதிப்பிலான கட்டணம் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பின்பும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளனர்.
மேலும் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா மீது விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது மட்டம் அல்லாமல் இந்த கட்டுப்பாடுகள் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்படும் முட்டுக்கட்டை அல்ல, அமெரிக்க நிறுவனங்கள் மீது, அமெரிக்கா பொருளாதாரம் மீது விதிக்கப்பட்டு உள்ள முட்டுக்கட்டை என விமர்சனமும் செய்துள்ளனர்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை, செமிகண்டக்டர், சாப்ட்வேற், ரீடைல் துறைகளை சேர்ந்த பல வர்த்தக அமைப்புகள் டிரம்ப்-க்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுபாடுகள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் திறன்வாய்ந்த ஊழியர்கள் சப்ளையை குறைத்து பல பணிகளை செய்ய முடியாமல் போக கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இந்த வர்த்தக அமைப்புகள் ஹெச்1பி விசா-வில் மாற்றங்களை செய்ய முக்கிய துறைகள் உடன் இணைந்து செயல்பட கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல் ஹெச்1பி விசாவில் செய்யப்படும் மாற்றங்கள் தற்போது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை தேர்வு செய்யும் முறையிலும், பயிற்சி அளிக்கும் முறையிலும், திறன்வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக்கொள்வதில் எவ்விதமான மாற்றமும் இருக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications