அமெரிக்கா மற்றும் கனடாவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன. தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஊடகம், நிதி சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான பணிநீக்கம் அதிகம் காணப்படுகின்றன. இதனால் அமெரிக்கா, கனடா என்ஆர்ஐ ஊழியர்கள் தினமும் ரெசிஷன் அச்சத்தில் வேலைக்குச் சென்று வருகிறார்கள். 2024 ஆம் ஆண்டில் எந்தெந்த நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
டெக் துறை: அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாஃப்ட், இன்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. இது தவிர, ஈ பே, யூனிட்டி சாப்ட்வேர், டாகுசைன், ஸ்னாப், சேல்ஸ்ஃபோர்ஸ், சிஸ்கோ, ஆரோரா இன்னோவேஷன், கனடாவின் பிளாக்பெரி, சிரியஸ் எக்ஸ்எம், பம்பிள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

EV துறை: தொழில்நுட்பத் துறையில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனத் துறையிலும் பணிநீக்கம் ஏற்பட்டுள்ளன. டெஸ்லா, லூசிட் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளன.
ஊடகத் துறை: அமெரிக்கா மற்றும் கனடாவில் இத்துறையில் இருக்கும் பல நிறுவனங்கள் பணியாளர்களை வெளியேற்றியுள்ளன. பிக்சார், ஸ்கை, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், பாராமவுண்ட் குளோபல், பிசினஸ் இன்சைடர், பெல் கனடா போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
நிதி சேவை துறை: பேபால், பிளாக், சிட்டி குரூப், மோர்கன் ஸ்டேன்லி, நாஸ்டாக், பிளாக்ராக் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
ரீடைல் துறை: அமெரிக்கா மற்றும் கனடாவில் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான வால்மார்ட், அழகுசாதன நிறுவனமான எஸ்டி லாடர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான வேஃபேர், மேசிஸ், லெவி ஸ்ட்ராஸ், ஹெர்ஷிஸ், நைக், கான்வெர்ஸ் போன்ற நிறுவனங்களும் பணியாளர்களைக் குறைத்துள்ளன.
சுகாதாரத் துறை: நோவா வேக்ஸ், கென்வியூ நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளது.
பாதுகாப்புத் துறை: லாக்ஹீட் மார்டின், ஸ்பிரிட் ஏரோ சிஸ்டம்ஸ், எல்3ஹாரிஸ் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் துறை: யுபிஎஸ், ஃபெடெக்ஸ் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளது.
இயற்கை வளத் துறை: செசாபீக் எரி, பீட்மான்ட் லித்தியம், டிசி எனர்ஜி, கனடா நாட்டின் என்பிரிட்ஜ் நிறுவனங்களும் பணியாளர்களைக் குறைத்துள்ளன.
இந்த வேலை இழப்புகளுக்கு பொருளாதார சவால்கள், தொழில்நுட்ப மாற்றம், நிறுவனங்களின் செயல்பாட்டு மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications