சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா பல நாடுகளை ஓரம் கட்டி டாப் 5 இடத்திற்குள் நுழைந்து வரும் வேளையில், சீனா அதிரடியாக வளர்ச்சி அடைந்து அமெரிக்காவுக்கு டஃப் பைட் கொடுக்கிறது.

உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெறும் 34 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 வருடத்தின் உலக நாடுகளின் மொத்த ஜிடிபி 3 மடங்கு என்ற அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது வர்த்தக சந்தையில் மிகவும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு அதாவது கொரோனா தொற்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 87 டிரில்லியன் டாலராக இருந்தது. கடந்த 2 வருடம் கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட சரிவை சமாளித்து மீண்டு வருவதே பெரும் சுமையாக மாறியிருந்தது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் 87 டிரில்லியன் டாலர் சர்வதேச ஜிடிபி-யில் அமெரிக்கா 21.38 டிரில்லியன் டாலர், சீனா 14.34 டிரில்லியன் டாலர், இந்தியா 2.84 டிரில்லியன் டாலர் பங்கீட்டை கொண்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று உடன் சேர்த்து 3 வருடங்களுக்கு பின்பு 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 25.46 டிரில்லியன் டாலராகவும், சீனாவின் ஜிடிபி 18.1 டிரில்லியன் டாலராகவும், இந்தியாவின் ஜிடிபி 3.39 டிரில்லியன் டாலராகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதாவது இந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜிடிபி 4.08 டிரில்லியன் டாலரும், சீனா 3.76 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா வெறும் 0.55 டிரில்லியன் டாலர் ஜிடிபி மட்டுமே சேர்ந்துள்ளது.
சொல்லப்போனால் 3 வருடத்தில் சீனாவும், அமெரிக்காவும் தனது பொருளாதார அளவீட்டில் புதிய இந்தியாவை சேர்த்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜடிபி 3.39 டிரில்லியன் டாலர். ந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜிடிபி 4.08 டிரில்லியன் டாலரும், சீனா 3.76 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி கூடுதலாக சேர்த்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications