மும்பை: சமீபத்திய மாதங்களாகவே ஐடி துறையில் மிகப்பெரிய அளவிலான பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் பல்வேறு டெக் ஜாம்பவான்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களும் அடங்குவார்கள்.
இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஹெச்1 பி விசா மூலம் பணியாற்றும் ஊழியர்கள் மிக அதிகம்.
இது குறித்து உலகாவிய குடியேற்ற சேவை வழங்குனரான என்வோய் குளோபல், ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் கிட்டதட்ட 89% நிறுவனங்கள், பணியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அண்டை நாட்டு ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனவாம்.
இந்தியர்களுக்கு பாதிப்பு
இதனால் அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர் அதிகம் எனலாம். குறிப்பாக ஹெச் 1 பி விசா மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள், 60 நாள் காலக்கெடுவில் புதிய வேலையினை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலரும் மீண்டும் புதியதாக சுற்றுலா விசாவின் மூலமோ அல்லது சொந்த நாடுகளுக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹெச் 1 பி விசா மூலம் அதிக பணியமர்த்தல்
கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட இது குறித்தான ஆய்வில் 443 பதில்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டில் புதிய பணியமர்த்தலும் முடக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த காலகட்டத்திலும் அதிகம் பணியில் இருந்தது ஹெச் 1 பி விசா வைத்திருந்தவர்களே. இது பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிக இந்தியர்கள் பணி நீக்கம்
இதற்கிடையில் 2023ம் முதல் காலாண்டில் மிக அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தினர். இதற்கிடையில் தான் சமீபத்திய பணி நீக்கத்தில், 51% வெளி நாட்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சர்வதேச அளவில் மந்த நிலையானது நிலவி வரும் நிலையில், தேவையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் ஹெச் 1 பி விசா மூலம் பணியமர்த்தியது என்பது உச்சத்தில் உள்ளது. ஆக நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்திய நிலையில், தற்போது பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தியர்கள் பாதிப்பு
இதற்கிடையில் ஹெச் 1பி விசாவுக்கு விண்ணபித்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் உள்ளது. மார்ச் 1 அன்று விசா பதிவுக்கான காலம் தொடங்கிய நிலையில், முடிந்தவுடன் லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படலாம்.
அமெரிக்காவில் இன்றும் ஹெச் 1 பி விசா மூலம் அதிகளவில் பயனடைவது இந்தியர்கள் தான். ஆக இந்த பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதும் இந்தியர்களே.
அவுட்சோர்ஸிங் பணி நீக்கம்
இந்த நிலையில் தற்போது பணியமர்த்தும் ஊழியர்களில் அதிகம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அவுட்சோர்ஸிங் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் மூலமும் அமெரிக்காவுக்கு வேலையே அவுட்சோர்ஸிங் கொடுத்தாலும் அதனால் பலனடைய கூடியதும் இந்தியா அதிகம் எனலாம்.


Click it and Unblock the Notifications