உலகம் முழுவதும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளால் ரெசிஷன் அச்சம் உச்சத்தில் இருக்கும் வேளையில் பிரட்டன் நாட்டை தொடர்ந்து அடுத்து எந்த நாடு ரெசிஷனில் மாட்டியுள்ளதாக அறிவிக்கும் என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையால் மாட்டிக்கொண்டும், குறைவான வர்த்தகத்தை பெறும் நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைக்கும் விதிமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
தினமும் ஏதாவது ஒரு நிறுவனம் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில், இந்த ஒரு நிறுவனம் மட்டும் இதுவரையில் யாரும் செய்திடாத வகையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபலமான சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bishop Fox, சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் பார்ட்டி வைத்தது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஊழியர்களுக்கு மிகவும் காஸ்ட்லியான பிராண்டெட் மதுபானம் அளிக்கப்பட்டது.
இந்த பார்ட்டி குறித்து சக சைபர்செக்யூரிட்டி மற்றும் அப்பகுதி நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் வியந்து பார்த்த நிலையில், பார்ட்டி நடந்த அடுத்த சில நாட்களிலேயே Bishop Fox தனது மொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது Bishop Fox நிறுவன ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
Bishop Fox நிறுவனம் RSA cybersecurity conference நடக்கும் ஒரு இடத்தை பல மாதங்களுக்கு முன்பே புக் செய்திருந்தது. இந்த இடத்தில் ஒரு நாள் முழுக்க சைபர்செக்யூரிட்டி குறித்து லைவ்ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிடப்பட்டது என இந்நிறுவன செய்திதொடர்பாளர் தெரிவித்தார். இதை தொடர்ந்து தான் பார்ட்டி நடந்துள்ளது, மேலும் பார்ட்டிக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டு உள்ளது என்பதை Bishop Fox தெரிவிக்கவில்லை.

Bishop Fox நிறுவனத்தில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 13 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்பு வெளியான நிலையில் சுமார் 50 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிவிட்டரில் இது அதிர்ச்சி அளிக்கும் முடிவு எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கையில் மாட்டிக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பணிநீக்கம் என்பது தினமும் வரும் செய்தியாக மாறிவிட்டாலும், இதில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான பாதிப்பு தெரியும். மேலும் Bishop Fox நிறுவனம் பணிநீக்கம் செய்யும் நிலையில் இருக்கும் வேளையில் எதற்காக காஸ்ட்லியான சரக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என்ற கேள்வி தான் முக்கியமானதாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications