டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற டெக் உலகை தலைகீழாகப் புரட்டிப்போட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், அமெரிக்க அரசின் தொடர்ந்து அதிகரித்து வரும் கடனைப் பற்றி பெரும் எச்சரிக்கையை தற்போதைய அரசுக்கும், புதிதாக அமைய உள்ள டிரம்ப் அரசுக்கும் விடுத்துள்ளார். தற்போது அமெரிக்காவின் தேசியக் கடன் 35 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு கிரிப்டோகரன்சிகளான பிட்காயின் மற்றும் டோஜ்காயின் ஆகியவற்றின் விலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் கடன் அதிகரித்துள்ளது பெரும் விமர்சனமாக அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் விளங்குகிறது. அமெரிக்க அரசின் கடனும் - கிரிப்டோகரன்சியும் முடிச்சப்போட ஒரு காரணம் உள்ளது.

இந்த நிலையில் சிலர் பிட்காயின் 81000 டாலருக்கு உயர்ந்த நிலையில், இதை வைத்து அமெரிக்காவின் கடனை குறைக்கலாம் என்ற ஒரு யோசனையை முன்வைக்கின்றனர். இதை டிரம்ப் அரசு கட்டாயம் செய்யும் என பலரும் நம்புவது தான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. இதுதான் அமெரிக்க அரசின் கடனும் - கிரிப்டோகரன்சியும் முடிச்சப்போட காரணமாக விளங்குகிறது.
ஆனால் எலான் மஸ்க், அரசின் அதிகப்படியான செலவினம் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார், இதை முதல்கட்டமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அவர், தற்போதைய அரசின் செலவினப் போக்கைக் கட்டாயம் தொடர முடியாது என்று விவரித்துள்ளார்.
இதனால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் தற்போதைய ஜோ பைடன் அரசுக்கும், புதிதாக அமைய உள்ள டொனால்டு டிரம்ப் அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
மஸ்க்கின் கருத்துக்கள் அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலம் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் பங்கு குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அதிகரித்து வரும் கடன் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்க அரசு அந்நாட்டின் கடனை தீர்ப்பதற்காக பிட்காயினையும், டோஜ் காயினையும் பயன்படுத்தினால் கிரிப்டோ சந்தை உலகமும் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications