இரண்டாக உடையும் அமெரிக்க பொருளாதாரம்.. ரெசிஷன் நிச்சயம்.. திக் திக் நேரம் ஆரம்பம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க மக்களும், அமெரிக்கப் பொருளாதாரமும் இரு பிரிவாக உடையும் நிலையில் அந்நாட்டில் ரெசிஷன் அச்சம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

 

இதை நிரூபணம் செய்யும் வகையில் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், நுகர்வோர் கடன், மக்களின் நிதி நிலை, குறைந்த வருமானம் கொண்டவர்கள் கிரெடிட் கார்டுகளை மட்டுமே நம்பி வாழும் நிலை போன்றவை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மறுபக்கம் அமெரிக்காவின் ஒரு பகுதி மக்கள் அதிகளவில் செலவு செய்வது, ஆடம்பர பொருட்களை வாங்குவது, வெளிநாட்டு சுற்றுலாவுக்குச் செல்வது என அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வித்தியாசம் உருவாகியுள்ளது.

இது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க செய்யும் தவறுக்கும் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனா..! அமெரிக்க செய்யும் தவறுக்கும் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனா..!

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க மக்களின் ஷாப்பிங், உணவு பொருட்கள், பீர் ஆகியவற்றில் துவங்கி பல அடிப்படை மற்றும் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் சீப் பொருட்களை அதிகம் வாங்க துவங்கியுள்ளனர். இதேபோல் கிரெடிட் கார்டு மீதான மக்களின் கடன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இடைவெளி

இடைவெளி

இதனால் அமெரிக்க மக்கள் மத்தியில் பொருளாதாரத்தில் பெரிய இடைவெளி உருவாகியுள்ளது, இதேபோல் அரசின் உதவி தொகை, குறைந்த வட்டி விகிதம் ஆகியவற்றின் மூலம் பலன் அடைந்த அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது சரிவு பாதையில் வேகமாகச் செல்ல துவங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு
 

வேலைவாய்ப்பு

இதேபோல் அமெரிக்காவில் ஊழியர்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, இதேபோல் அதிகச் சம்பளத்திற்காக மாறும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது தான்.

61 சதவீத அமெரிக்க மக்கள்

61 சதவீத அமெரிக்க மக்கள்

LendingClub நிறுவனத்தின் ஆய்வுகள் படி சுமார் 61 சதவீத அமெரிக்க மக்கள் paycheck to paycheck வாழ்க்கையை நடத்துகின்றனர், அதாவது வாங்கும் சம்பளத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் முதலீடுகள் இருக்காது, சேமிப்பு இருக்காது, கூடுதல் செலவு வந்தால் கடன் பெற வேண்டிய கட்டாயம் வரும்.

இந்தியா - அமெரிக்கா

இந்தியா - அமெரிக்கா

இந்தியாவைப் போலவே அமெரிக்காவில் நடுத்தர மக்கள் கூடுதலாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதும் நிகழ்கிறது. இதனால் அமெரிக்காவின் வர்த்தகச் சந்தையில் பெரும் தொய்வு ஏற்படுவது மட்டும் அல்லாமல் அந்நாட்டுப் பொருளாதாரம் சரியும் நிலைக்குத் தள்ளப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA economy is splitting in two, 61 Percent of Americans were living paycheck to paycheck in june

USA economy is splitting in two, 61 Percent of Americans were living paycheck to paycheck in june இரண்டாக உடையும் அமெரிக்கப் பொருளாதாரம்.. ரெசிஷன் நிச்சயம்.. திக் திக் நேரம் ஆரம்பம்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X