அமெரிக்காவுக்கே இந்த அடின்னா இந்தியாவுக்கு? USA 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி காணுமாம்!

உலகின் மிகப் பெரிய மற்றும் வலுவான பொருளாதாரமான அமெரிக்க பொருளாதாரமே, கொரோனா வைரஸால் சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது.

உலகிலேயே தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. மொத்தம் 2.45 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுமார் 6,098 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க அரசே இந்த வைரஸை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதற்கு மத்தியில் அமெரிக்க பொருளாதாரம் வேறு செம அடி வாங்கும் என பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களைக் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். செம அடி என்றால் அப்படி என்ன பெரிய சரிவைக் கண்டு விடும் என்று கேட்கிறீர்களா..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

காலாண்டு ஜிடிபி

காலாண்டு ஜிடிபி

அமெரிக்க பொருளாதாரம் இந்த மார்ச் 2020 காலாண்டில் (2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு) சுமாராக 3.4 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது மார்கன் ஸ்டான்லி. அதோடு ஜூன் 2020 காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் சுமார் 38 சதவிகிதம் சரியலாம் என்கிறது மார்கன் ஸ்டான்லி.

2020-ம் ஆண்டுக்கு

2020-ம் ஆண்டுக்கு

இந்த ஒட்டு மொத்த 2020-ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் சுமாராக 5.5 சதவிகிதம் சரியலாம் எனவும் கணித்து இருக்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்த 5.5 % சரிவு என்பது, அமெரிக்க பொருளாதார வரலாற்றில் 1946-ம் ஆண்டுக்குப் பின் காணும் மிகப் பெரிய வீழ்ச்சியாம்.

2009 கால கட்டம்

2009 கால கட்டம்

உலக வங்கியின் தரவுகள் படி, கடந்த 2009 பொருளாதார நெருக்கடி காலத்தில் கூட, அமெரிக்க பொருளாதாரம் (ஜிடிபி) 2.5 சதவிகிதம் தான் வீழ்ச்சி கண்டது. ஆனால் இப்போது 5.5 சதவிகிதம் வீழ்ச்சி காண்கிறது என்பது யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. 1946-க்குப் பின் மிகப் பெரிய வீழ்ச்சி என்றால் 2020 - 1946 = 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி என்று தானே சொல்ல வேண்டும்.

இந்தியா

இந்தியா

ஏற்கனவே இந்தியாவில் கடந்த நான்கு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் அரசு அறிவித்து இருக்கும் ஷட் டவுன், வட்டி குறைப்பு நடவடிக்கை, இ எம் ஐ ஒத்திவைப்பு, உதவித் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும், எவ்வளவு பொருளாதாரம் வீழ்ச்சி காண்பதை தடுக்கும் என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஃபிட்ச் ரேட்டிங்

ஃபிட்ச் ரேட்டிங்

இவ்வளவு இக்கட்டான சூழலில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண்பது மிகப் பெரிய விஷயம். இருப்பினும் இந்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியா 2% ஜிடிபி வளர்ச்சி காணலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்து இருக்கிறது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+