உலக வங்கி முதல் உள்ளூர் வங்கி வரையில் முக்கிய விவாதமாக இருப்பது உலகளவில் உருவாகி வரும் பொருளாதார மந்த நிலை தான். இப்படியிருக்கையில் உலகின் முக்கியமான நிதி நிறுவனம் ஜேபி மோர்கன் எப்படி அமைதியாக இருக்கும்.
ஜேபி மோர்கன் நிறுவனத்தின் சிஇஓ அமெரிக்கப் பொருளாதாரம் குறித்துப் பேசியுள்ளது அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள், சந்தை வல்லுனர்கள், மத்திய வங்கி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேபி மோர்கன் சிஇஓ
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டுப் பொருளாதாரம் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜேபி மோர்கன் சிஇஓ பேச்சு கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜேபி மோர்கன் சிஇஓ
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருவதால் பொருளாதார வளர்ச்சி கட்டுக்குள் உள்ளது எனப் பேசி வரும் நிலையில், ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டிமோன் அமெரிக்கா மற்றும் சர்வதேச பொருளாதாரம் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் அதாவது அடித்த 6 முதல் 9 மாத வரையிலான காலகட்டத்தில் ரெசிஷனுக்குச் செல்லும் எனச் சிஎன்பிசி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முக்கியக் காரணிகள்
அதிகரிக்கும் பணவீக்கம், பெரிய பெரிய வட்டி விகித உயர்வு, உக்ரைன் நாட்டிற்குள் தொடர்ந்து நுழைந்து வரும் ரஷ்யா, பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கட்டுப்பாடுகள் பலன் அளிக்காமல் இருக்கும் நிலை ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தை ரெசிஷனுக்குள் கொண்டு செல்லும் என ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.
ரெசிஷன்
அடுத்த ஐரோப்பா ஏற்கனவே ரெசிஷனில் நுழைந்துள்ள நிலையில் அடுத்து, பிரிட்டன் உட்படப் பல நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் காரணத்தால் அமெரிக்காவும் ரெசிஷனுக்குச் செல்ல வேண்டிய நிலை தானாக உருவாகும் என்று, இது அடுத்த 6 முதல் 9 மாதத்தில் நடக்கும் என்றும் ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.
S&P 500 குறியீடு சரிவு
ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டிமோன் தனது கணிப்பைக் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து பேசியுள்ளார். அமெரிக்காவின் S&P 500 குறியீடு 2022ல் மட்டும் சுமார் 24 சதவீதம் சரிந்துள்ளது.பிற மூன்று முக்கியக் குறியீடுகளும் சரிவில் தான் உள்ளது.
கோல்மேன் சாச்சஸ்
ஜூன் மாதம் கோல்மேன் சாச்சஸ் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் செல்ல 30 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாகவும், மோர்கன் ஸ்டான்லி 35 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்தது. தற்போது அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைவதை 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications