நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலைத் தான் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. கமலா ஹாரீஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் என்ற இரு மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ள தலைவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் கார்ப்ரேட் உலகிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்த அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் ஒவ்வொரு நாளும் பல விதமான கணிப்புகள் வெளியாகி முதலீட்டுச் சந்தைகளைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அதிபர் தேர்தல் 5ஆம் தேதி நடந்தாலும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பின்பு தான் ஆட்சி மாற்றம் நடக்கிறது.

ஆனால் முதலீட்டுச் சந்தையில் இந்த இடைப்பட்ட காலத்தில் ரத்தகளறியாகிவிடும், அமெரிக்கத் தேர்தலால் அமெரிக்கப் பங்குச்சந்தையும், இந்திய பங்குச்சந்தையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைத் தான் பார்க்கப்போகிறோம்.
அதிபர் தேர்தல் 5ஆம் தேதி நடந்தாலும் ஜனவரி 20ம் தேதி தான் புதிய அதிபர் பதவியேற்பு விழா நடக்கிறது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 3 மாத கேப்பில் தான் புதிய அதிபர் நியமிக்கப்படுகிறார்கள், முன்பெல்லாம் 4 மாதங்களாக இருந்த இந்த இடைவெளி தற்போது 3 மாதங்களாக குறைந்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க பங்குச் சந்தைகள் நிலையற்ற நிலையில் உள்ள வேளையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தால் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படும். இதனால் சந்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து முதலீட்டு சந்தையை குறித்து யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மையமாக வைத்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் டொனால்ட் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் யார் வெற்றி பெற்றாலும், சந்தை செயல்திறன் சில தடுமாற்றங்களைச் சந்திக்கும் என்பது 90 சதவீத ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆனால் பெரிய அளவிலான பாதிப்புகள் தடுக்கப்படும் என்பது பெடரல் ரிச்ரவ் வங்கியின் வட்டி குறைப்பு மூலம் தடுக்கப்படும் என்ற கணிப்புகள் நிலவுகிறது.
இதேபோல் முதலீட்டாளர்கள் தேர்தல் முடிவுகளைத் தாண்டி, பட்ஜெட் பற்றாக்குறையின் அளவீட்டை தெரிந்துக்கொள்ளவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என FxPro இன் தலைமை சந்தை ஆய்வாளர் அலெக்ஸ் குப்சிகேவிச் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, 'நிதியற்ற' வரி குறைப்புகள் அறிவித்ததற்காக இங்கிலாந்து பங்குச்சந்தை அதிகமான சரிவைச் சந்தித்தது அமெரிக்காவுக்கான பெரும் பாடமாக உள்ளது. இதனால் இந்த ஆட்சி மாற்றும், வட்டி குறைப்பு அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என FxPro இன் தலைமை சந்தை ஆய்வாளர் அலெக்ஸ் குப்சிகேவிச் கூறியுள்ளார்.
அமெரிக்க சந்தையில் செப்டம்பர் மாதத்தில் பத்திர முதலீட்டின் லாபம் அளவுகள் தொடர்ந்து சரிந்து, டாலர் மற்றும் தங்கத்தின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது மறக்க முடியாது. இதனால் இந்த ஆட்சி மாற்றமும், வட்டி குறைப்பு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது குப்ட்சிகேவிச் கூறினார்.
ஆனால் வேட்பாளர்கள் இந்த நிலையைக் குறித்துப் பேசுவதைத் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் தேர்தலுக்குப் பிறகு முதல் சில நாட்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அதிகமாகச் சரியும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.
இதேபோல் அமெரிக்கா அதிபரால் தேர்தல் மூலம் இந்திய முதலீட்டு சந்தைக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் சர்வதேச சந்தையில் நடக்கும் மாற்றங்கள் இந்திய சந்தையை கட்டாயம் பாதிக்கும் என்பதை மறுக்க முடியாத உண்மை. இதனால் நவம்பர் மாதம் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உஷாராக முதலீடு செய்ய வேண்டும்.
இதேபோல் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியைப் போலவே இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்புகளையும், விசா கட்டுப்பாடுகளையும் விதிப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் இது நடக்க வாய்ப்பில்லை.
காரணம் டொனால்டு டிரம்ப் ஆட்சியைத் தொடர்ந்து ஜோ பைடன் ஆட்சியிலும் சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் சீனா தான் முக்கிய டார்கெட் ஆக இருக்கும்.
இதனால் அமெரிக்கா ஓரேநேரத்தில் சீனா மற்றும் இந்தியாவை எதிர்க்க வாய்ப்பில்லை என்பது தான் நிதர்சனம். எனவே டிரம்ப், கமலா என யார் வந்தாலும் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான உறவில் பெரிய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதேபோல் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், இது சில வாரங்களுக்கு மட்டுநே நீடிக்கும் என கணிக்கப்படுகிறது. இதேபோல் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வட்டி விகிதம் கடந்த முறை போல் அதிகளவில் குறைக்கப்பட்டால் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை தப்போதைய 80000 அளவீட்டில் இருந்து 82000 முதல் 83000 வரையில் உயரலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications