அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை திடீரென நான்கு உயர்மட்ட நாடாளுமன்ற தலைவர்களை அடுத்த வாரம் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார். அமெரிக்க உயர்மட்ட ஆட்சியின் இந்த கூட்டத்திற்கு முக்கியமான காரணம் இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களின் வாழ்வியலை இந்த கூட்டம் தலைகீழாக மாற்றும் என்றாலும் மிகையில்லை.
உலகின் மாபெரும் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவிடம் ஜூன் மாதத்திற்கு பின்பு தனது செலவுகளுக்கு நிதி செலுத்த போதுமான பணமில்லை. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதற்குள் சரி செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசின் உயர்மட்ட குழு முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளது.

அமெரிக்க அரசின் கருவூலம் வெளியிட்ட அறிவிப்பில் அரசின் கடன் வரம்பு அதிகரிப்பு செய்யாவிட்டால் ஜூன் மாதத்திற்கு பின் அரசின் செலவுகளுக்கு போதுமான பணம் இல்லாமல் போகலாம் என்று அறிவித்துள்ளது. மே 9 அன்று குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி உள்ளிட்ட தலைவர்களை ஜோ பைடன் அழைக்க இதுதான் காரணம்.
அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஜெனட் யெல்லன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்னதாக காங்கிரஸின் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்க அரசு மக்கள் சேவைகளுக்கும் பிற அனைத்து நிதி செலவுகளுக்கும் நிதியை திரட்ட முடியாது. இந்த நிதி பற்றாக்குறை பிரச்சனையை விரைவாக சரி செய்ய வேண்டும் என ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அழைத்துள்ள கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த வாரம் குடியரசுக் கட்சி அமெரிக்க அரசின் கடன் அளவை அதிகரிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தில் அரசு தனது செலவுகளை குறைக்கும் திட்டங்களும் இருக்கும் காரணத்தால் இதை எற்க முடியாது என அறிவித்துள்ளது பைடன் கட்சி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு தீர்வு காணவே கெவின் மெக்கார்த்தி, ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் ஆகியோரை ஜோ பைடன் அழைத்துள்ளார். இது மட்டும் நடக்காவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications