உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.25 முதல் 5.5 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி உயர்வு மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தை 2 சதவீதத்திற்குள் கொண்டு வர முடியம் என பெடரல் ரிசர்வ் நம்புகிறது, ஆனால் இந்த பென்ச்மார்க் வட்டி விகித உயர்வு அமெரிக்க நுகர்வோர் சந்தையை அதிகளவில் பாதிக்க உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் 2001க்கு பின்பு அதிகப்படியாக 5.25 - 5.5 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலையும் உயர கூடும்.
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் இனி வரும் காலத்திலும் வட்டி விகித உயர்வு இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த வட்டி விகிதம் எப்படி அமெரிக்க மக்களையும், அமெரிக்காவில் இருக்கும் இந்திய மக்களையும் பாதிக்கும்..?
அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வின் மூலம் அந்நாட்டின் வங்கிகள் அளிக்கும் அனைத்து கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் புதிகாக கடன் வாங்கினால் அதிகப்படியான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும், இது தனிநபர் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் பொருந்தும்.
இதன் மூலம் கடன் வாங்கி வர்த்தகத்தை நடத்தும் நிறுவனங்கள் முதல் வீட்டுக்கடன், வாகன கடன் என அனைத்து ரீடைல் கடன்களுக்கும் வட்டி விகிதம் உயரும். இது சிறுக சிறுக சேமித்து வாழ்க்கையை நடத்தும் அமெரிக்காவில் வாழும் NRI மக்களை அதிகம் பாதிக்கும் என்றால் மிகையில்லை.
அமெரிக்காவுக்கு ஆன்சைட்-க்காக சென்றாலும் சரி, படிப்பதற்காக சென்றாலும் சரி பெரும்பாலான இந்தியர்கள் கார் லோன் மூலம் பழைய அல்லது புதிய கார்களை வாங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது வட்டி விகிதம் உயர்வது மூலம் கார் லோன் வாங்கியவர்கள் அனைவரும் அடுத்த மாதம் முதல் கூடுதல் ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும்.
இதேபோல் அமெரிக்காவில் ஹெச்1 பி விசா, எல் 1 விசா என எந்த விசாவில் பணியாற்றி வந்தாலும், குடும்பத்துடன் வாழ்பவர்கள் சமீப காலமாக சொந்தமாக வீட்டை வாங்குவது வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் வீட்டுக் கடன் வாங்கிய அனைத்து NRI-களையும் இந்த வட்டி விகித உயர்வு பாதிக்கும்.

இந்த பாதிப்புகள் அனைத்தும் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கும், ஆனால் இந்தியர்கள் அதிகப்படியான பணத்தை சேமிக்க வேண்டும் என இலக்கில் இருக்கும் போதும் இந்த வட்டி உயர்வு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இதேபோல் இந்த வட்டி விகித உயர்வு மூலம் சில நுகர்வோர் பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இந்த வட்டி விகித உயர்வின் மூலம் அமெரிக்காவில் வாழும் அனைவரும் செலவுகளை குறைத்து, சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வார்கள். காரணம் இந்த வட்டி விகித உயர்வு வைப்பு நிதிக்கான டெபாசிட் வட்டி வருமானமும் அதிகரிக்கும் இதனால் பெரும்பாலானவர்கள் பணவீக்கத்தை சமாளிக்க கூடுதல் பணதத்தை சேமித்து கூடுதல் வட்டி வருமானக்தை பெற முயல்வார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications