உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்கும் விதமாக புதன்கிழமை உடன் நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தில் பலரும் எதிர்பார்த்தபடியே தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வால் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட கூடும். இதனால் தங்கம் முதல் பங்குச்சந்தை வரையில் இன்று தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதோடு பிற சந்தையில் இருக்கும் முதலீடுகள் அமெரிக்க பத்திர சந்தையில் குவியும் காரணத்தால் டாலர் மதிப்பும் உயர கூடும்.

இதை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலோ அல்லது நாணய மதிப்பின் கட்டுப்பாடு கையைமீறி சென்றால் அவரச நாணய கொள்கை கூட்டத்தின் வாயிலாகவோ ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை உயர்த்த கூடும்.
2 மாதத்திற்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 0.25 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தி பின்பு இனி இந்த வரும் வட்டி விகிதம் உயர்த்தும் தேவை இருக்காது என்ற கருத்து நிலவியது. இதன் பின்பு OPEC நாடுகள் எடுத்த கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவை தொடர்ந்து அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்தது.
ஒருபக்கம் விலைவாசி உயர்வால் அமெரிக்க மக்கள் கதறும் நிலையில், வங்கியில் கடன் வாங்கிய சாமானிய மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரையில் இந்த வட்டி விகிதத்தால் பாதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்க மத்திய வங்கி அந்நாட்டின் பணவீக்கத்தை 2 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது. அதற்காக அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வட்டி விகித உயர்வை அறிவித்து வருகிறது. 2023 மார்ச் முதல் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகித உயர்வை அறிவித்த போதிலும், பணவீக்கம் குறையவில்லை. மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் பணவீக்கம் 5 சதவீதமாகக் இருந்து, இது பெடரல் ரிசர்வ்-ன் 2 சதவீத இலக்கை விட அதிகம் என்பதால் மே மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
முதல் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிதமான வேகத்தில் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேபோல் கடந்த மாதங்களில் அந்நாட்டின் வேலை வாய்ப்புகளும் வலுவாக இருந்ததாகவும், பணவீக்கம் உயர்ந்த நிலையில் வேலையின்மை விகிதம் குறைவாக இருந்ததாகவும் பெடரல் ரிசர்வ் இன்றைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பெடரல் ரிசர்வ் மார்ச் 22 அன்று நடந்த கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியது. அமெரிக்க பணவீக்கத்தை 2 சதவீதமாக குறைக்கும் வேலை முடியும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்று பெடரல் ரிசர்வ் பலமுறை கூறியிருந்தாலும், வங்கி நெருக்கடி மற்றும் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் எத்தகைய முடிவை வேண்டுமானாலும் எடுக்க கூடும்.


Click it and Unblock the Notifications