மீண்டும் வட்டி உயர்வு.. கதறும் மக்கள்.. பொருளாதார வளர்ச்சி வெறும் 0.5%..!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்கவும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் பெடரல் ரிசர்வ் கடந்த 4 நாணய கொள்கை கூட்டத்திலும் 0.75 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தி வந்த நிலையில் இந்த முறை ஏற்கனவே ஜெரோம் பவல் கூறியது போல் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைத்து பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் 2007க்கு பின்பு அமெரிக்க மக்கள் அதிகப்படியான வட்டி விகிதத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் பணவீக்க டார்கெட் என்ன தெரியுமா..?

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்-இன் இந்த வட்டி விகித உயர்வு மூலம் அந்நாட்டு மக்கள் வாங்கும் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன், கார்பரேட் லோன் ஆகிய அனைத்தின் வட்டியும் அதிகரிக்க உள்ளது. இந்த வட்டி விகிதம் 2007ஆம் ஆண்டுக்கு பின்பு அதிகமான அளவீட்டை தொட்டு உள்ளதால் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் இதன் மூலம் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஓபன் மார்க்கெட் கமிட்டி

ஓபன் மார்க்கெட் கமிட்டி

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் ஓபன் மார்க்கெட் கமிட்டி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அதன் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.25% முதல் 4.5% இலக்கு வரம்பிற்கு உயர்த்தியது. இதன் மூலம் கொள்கை வகுப்பாளர்கள் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் அடுத்த ஆண்டு 5.1% இல் முடிவடையும் என்றும், 2024 ஆம் ஆண்டு இது 4.1% ஆகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

வேலையின்மை விகிதம்

வேலையின்மை விகிதம்

இதேபோல் அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4.6% ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் 2024 வரையில் இந்த அளவீடு தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக இருக்கும், 4.6 சதவீதம் என்பது மிகவும் அதிகமாகும்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இதேபோல் இந்த வட்டி விகித உயர்வு, சந்தையின் போக்கு ஆகியவற்றை வைத்து செப்டம்பர் மாதம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2023ல் 1.2 சதவீதமாக உயரும் எனக் கணித்திருந்தது. ஆனால் தற்போது 0.5 சதவீதமாக மட்டுமே உயரும் எனக் கணித்துள்ளது.

பணவீக்க டார்கெட்

பணவீக்க டார்கெட்

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 0.50 சவீத வட்டி உயர்வும், இதற்கு முன்பு 4 முறை தொடர்ந்து 0.75 சதவீதம் அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் மூலம் காலப்போக்கில் அமெரிக்காவின் பணவீக்க டார்கெட் அளவான 2 சதவீதத்தை அடையும் என கணித்துள்ளது பெடரல் ரிசர்வ்-ன் ஓபன் மார்க்கெட் கமிட்டி.

பங்குச்சந்தை சரிவு

பங்குச்சந்தை சரிவு

பெடரல் ரிசர்வ்-ன் ஓபன் மார்க்கெட் கமிட்டி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அதன் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.25% முதல் 4.5% ஆக அறிவித்த நிலையில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் ஆகியவை அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது.

இந்த எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+