உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.25 முதல் 5.5 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 2001க்கு பின்பு அதிகப்படியாக உயர்த்தியிருந்தாலும் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் வட்டி விகித உயர்வை அறிவித்த கையோடு உலகமே பயந்து எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான ரெசிஷன் குறித்து ஜெரோம் பவல் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். எதற்காக இந்த பயம் என்றால் அமெரிக்காவில் ரெசிஷன் எனில் இது வளரும் நாடுகளை மட்டும் அல்லாமல் பிற வல்லரசு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும்.

இந்த நிலையில், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை அமெரிக்காவின் ரெசிஷன் குறித்து இனி மத்திய வங்கி அதிகாரிகள் கணிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக சரிந்து வந்தது.
ஆனால் இப்போது அமெரிக்க பொருளாதாரத்திற்கு போதுமான பாதுகாப்பு கிடைத்துள்ள காரணத்தால் இனி ரெசிஷன் குறித்து தொடர்ந்து கணிக்கும் பணியை பெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செய்ய தேவையில்லை என தெரிவித்துள்ளார். பெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் ரெசிஷன் almost as likely என்ற மதிப்பீட்டு உடன் கண்காணிக்க துவங்கினர்.
இதை தொடர்ந்து மார்ச் மாதம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சிலிக்கான் வேலி வங்கியின் வீழ்ச்சியும், அமெரிக்க வங்கி தடுமாற்றமும் 2023 ஆம் ஆண்டு பிற்பகுதியில் a mild recession உருவாகும் என கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த மோசமான நிலையில் பொருளாதாரத்திற்கு போதுமான பாதுகாப்பு கிடைத்துள்ள காரணத்தால் இனி ரெசிஷன் குறித்து கணிக்கும் பணி தேவையில்லை என கூறப்பட்டு உள்ளது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதேபோல் அமெரிக்காவில் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படாமல் பணவீக்க பாதிப்பில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் உள்ளது எனவும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை தெரிவித்தார். இது அமெரிக்க வேலைவாய்ப்பு சார்ந்து இருக்கும் பொருளாதார அளவீடுகளுக்கும் வலிமை சேர்க்க உள்ளது.
அமெரிக்காவில் ரெசிஷன் குறித்த அச்சம் குறைந்துள்ளதால் இனி வரும் வாரங்களில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிய வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் இந்திய ஐடி நிறுவனங்களால் புதிதாக பெறப்படும் வர்த்தகம் அதிகரிக்கும் இதனால் ஐடி பங்குகள் மீண்டும் முக்கியத்துவம் பெறவும் வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications