உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளைத் தவிர்க்க ரஷ்ய அரசுக்கு உதவிய நிறுவனங்களை இலக்காக கொண்டு வெள்ளிக்கிழமை ரஷ்ய நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் முக்கியமான நபர்கள் மீது புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்க கருவூலத் துறை ரஷ்யாவின் உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறைகளை குறிவைத்து மிக முக்கியமான மற்றும் அதிகப்படியான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தெரிகிறது.
ரஷ்யாவின் வருவாய் ஈட்டும் பிரிவுகளில் உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறை முக்கியமானவை.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம்
உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா தனது ஏழு கூட்டணி நாடுகள் உடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கீழ் சுமார் 250 நபர்களையும், நிறுவனங்களையும் தண்டிக்க முடிவு செய்துள்ளது. இப்புதிய தடை உத்தரவுகள் கீழ் வங்கிகள், ஆயுத விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நிதித் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
250 நிறுவனங்கள், தனிநபர்கள்
இந்த தடையில் ரஷ்ய இருக்கும் நிறுவனங்கள், நபர்கள் மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுவிஸ் வரையில் இருக்கும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது இந்த நிதியியல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 250 நிறுவனங்களும், தனிநபர்களும் ரஷ்யா மீதான தடையை மீறி உதவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
G7 கூட்டணி நாடுகள்
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் கூறுகையில் எங்கள் G7 கூட்டணி நாடுகள் உடனான எங்கள் நடவடிக்கைகளை உக்ரைனுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுப்போம், உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என்பதைக் காட்டுகிறது.
2 பில்லியன் டாலர் உதவி
இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை அமெரிக்க வெள்ளை மாளிகை ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் பென்டகன் மேலும் பல வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு சிறிய, உயர் தொழில்நுட்ப ட்ரோன்களுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவியை உக்ரைனுக்கு அளிப்பதாக அறிவித்தது.
90 நிறுவனங்கள்
மேலும் அமெரிக்க மாநில மற்றும் வர்த்தகத் துறைகள் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் ஆகியவையும் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் ரஷ்ய தயாரிப்புகள் மீதான வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்க தடை உத்தரவுகளை ஏய்ப்பவர்களின் பட்டியலில் கிட்டத்தட்ட 90 ரஷ்ய மற்றும் மூன்றாம் நாட்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் சீன நிறுவனங்களும் அடக்கம்.
வங்கிகள்
வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் நிதியியல் தடைகள் தொகுப்பில் சுமார் 12க்கும் அதிகமான நிதி நிறுவனங்கள், ரஷ்யாவின் மிகப்பெரிய அரசு சாரா பொது வங்கிகள் அடங்கும். இதோடு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கான முக்கியப் பொருளான கார்பன் ஃபைபர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.
முக்கிய தலைகள்
ரஷ்யாவின் பொருளாதாரத் தடை ஏய்ப்பு முயற்சிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கியமானவற்றில் சில சுவிஸ்-இத்தாலிய தொழிலதிபர் வால்டர் மோரேட்டி மற்றும் அவரது வணிகங்கள்; நூர்முராத் குர்பனோவ், ரஷ்ய-துர்க்மென் ஆயுத வியாபாரி, இவர் வெளிநாட்டில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதி என கூறப்படுகிறது மற்றும் ரஷ்ய தொழிலதிபர் அலெக்சாண்டர் யெவ்ஜெனிவிச் உடோடோவ், ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினின் முன்னாள் மைத்துனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications