அமெரிக்க அரசின் US Citizenship and Immigration Services (USCIS) துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில பிரிவு வெளிநாட்டு மாணவர்களுக்கு வொர்க் பர்மிட் வழங்குவதில் ப்ரீமியம் பிராசசிங் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் F-1 விசா மாணவர்கள் தற்போது இந்த ப்ரீமியம் வொர்க் பர்மிட் செயல்முறையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களை தாண்டி வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கியமான சலுகையை அளிக்க உள்ளது.
F1 விசா மாணவர்கள்
இதன் மூலம் Optional Practical Training (OPT) தேவைப்படும் F1 விசா மாணவர்கள், FORM I-765 நிலுவையில் உள்ள F1 விசா STEM OPT மாணவர்கள் வொர்க் பர்மிட்-க்கான ப்ரிமியம் பிராசசிங்-ஐ அப்கிரேட் செய்துக்கொள்ள முடியும்.
இதற்காக Form I-907 ஆன்லைன் மூலம் நிரப்ப USCIS வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இப்புதிய சேவை மார்ச் 6ஆம் தேதி முதல் துவங்க உள்ளது, பிற பிரிவுகளுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது.
இந்திய மாணவர்கள்
அமெரிக்கா சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் சீனா, இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். அதிலும் முக்கியமாக STEM பிரிவில் அதிகப்படியான மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். இப்புதிய வொர்க் பர்மிட்-க்கான ப்ரிமியம் பிராசசிங் பெரிய அளவில் இந்திய மாணவர்களுக்கு பலன் அளிக்கும்.
ஜோ பைடன் அரசு
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதன் மூலம் டிரம்ப் ஆட்சி காலத்தில் பதற்றத்திலேயே இருந்த வெளிநாட்டு மக்கள் நம்மதி அடைந்தனர்.
அமெரிக்க இந்தியர்கள்
இது மட்டும் அல்லாமல் ஜோ பைடன் ஆட்சியிலும், நிர்வாகத்திலும் அமெரிக்க இந்தியர்கள் அதிகளவிலானோர் இருக்கும் வேளையில் இந்தியர்கள் கூடுதல் பாதுகாப்பாக உணர்கிறார்கள். அமெரிக்க குடிமக்களை காட்டிலும் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தான் அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான பங்கு விகிக்கும் நிலையில் தொடர்ந்து பல்வேறு விசா தளர்வுகளை அந்நாட்டு அரசு அளித்து வருகிறது.
ஹெச்1பி மற்றும் எல்1 விசா பிரிவு
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அரசு பல ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் சில ஹெச்1பி மற்றும் எல்1 விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் சோதனை ஓட்டத்தை 2023 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் செய்ய உள்ளது.
அதிக பலன்
அமெரிக்க அரசு வழங்கும் ஹெச்1பி விசா மூலம் அதிக பலன் அடைந்த நிறுவனங்கள் பட்டியல், அமேசான் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியாக சுமார் 6,396 ஹெச்1பி விசாக்களைப் பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்போசிஸ் 3,151 விசாக்களையும், டிசிஎஸ் 2,725 விசாக்களையும் பெற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து காக்னிசென்ட் 2,521 விசாக்களைப் பெற்றுள்ளது, கூகுள் 1,562 விசாக்களைப் பெற்றுள்ளது, மெட்டா 1,546 விசாக்களைப் பெற்றுள்ளது, ஹெச்சிஎல் அமெரிக்கா 1,260 விசாக்களைப் பெற்றுள்ளது மற்றும் ஐபிஎம் 1,239 விசாக்களைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications