அமெரிக்காவின் பிரபலமான ஸ்டார்ட்அப் வென்சர் பண்ட் முதலீட்டாளர்களில் ஒருவரும், டெக் வல்லுனர்களில் ஒருவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக டொனால்டு டிரம்ப் நியமித்தார்.
டிரம்ப் நிர்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் பேபால் உயர் அதிகாரி டேவிட் சாக்ஸுடன் ஸ்ரீராம் கிருஷ்ணன் இணைந்து பணியாற்றுவார். இந்த நியமனம் அமெரிக்காவின் தொழில்நுட்பக் கொள்கை மட்டும் அல்லாமல் அந்நாட்டின் குடியேற்றச் சீர்திருத்தங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஸ்ரீராம் கிருஷ்ணனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. எப்படி..?

H-1B விசா: தற்போது அமெரிக்க அரசு விவாதிக்கப்பட்டு வரும் முக்கிய கொள்கை மாற்றங்களில் ஒன்று, H-1B விசாக்களுக்கான நாட்டு வாரியான வரம்பை நீக்குவது. இது மட்டும் செய்துவிட்டால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைத் தேடும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
H-1B விசா-வில் நாட்டு வாரியான வரம்பு எப்படி இயங்குகிறது?: அமெரிக்க நிறுவனங்கள் H-1B விசா மூலம் தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் ஹெல்த்கேர் போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிக்க அனுமதிக்கிறது என அனைவருக்கும் தெரியும், அதேபோல் வருடத்திற்கு 85000 பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்.
7 சதவீத வரம்பு: தற்போதைய நடைமுறையின் படி ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும் மொத்த H-1B விசாக்களில் 7% என்ற வரம்பு நிர்ணயிக்கிறது. அதாவது மொத்த விசா வழங்கும் எண்ணிக்கையில் ஒரு நாட்டுக்கு 7 சதவீதத்திற்கு அதிகமாக விசா வழங்க முடியாது. இந்த வரம்பு, இந்தியா போன்ற திறமையான தொழிலாளர்களுக்கான அதிகம் இருக்கும் நாடுகளுக்கும், இந்தியர்களை அதிகம் விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள் இருக்கும் வேளையில் கடுமையான சூழ்நிலையையும், தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்: தற்போது இந்த நாடு வாரியான வரம்பை நீக்குவது இந்தியாவிற்கு பெரும் ஜாக்பாட் ஆக அமையும், அதேவேளையில் இந்தியர்கள் உலகளாவிய டெக் வல்லுனர்கள் உடன் போட்டிப்போட்டு விசா பெற வேண்டும் என்ற பிரச்சனையும் உள்ளது. இதனால் தற்போது லாட்டரி முறையில் கிடைக்கும் விசா வாய்ப்புகள் நாடு வாரியான வரம்பை நீக்கப்பட்ட பின்பு கிடைக்காது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆதிக்கம்: தற்போது ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது மூலம் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது பதவியில் இருந்து அமெரிக்காவின் தொழில்நுட்பம், குடியேற்றம் மற்றும் அமெரிக்க பொருளாதார கொள்கை ஆகியவற்றை இணைக்கும் பாலமாக இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் நீண்ட கால வளர்ச்சிக்கு கொள்கை வாயிலாக அடித்தளம் அமைக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
நீண்ட கால கோரிக்கை: ஸ்ரீராம் கிருஷ்ணன் நீண்ட காலமாக திறமை அடிப்படையிலான குடியேற்றச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தொழிலதிபர்கள் ஆதரவு: டேவிட் சாக்ஸ் மற்றும் எலோன் மஸ்க் போன்ற முக்கிய தொழிலதிபர்களும், டெக் தலைவர்களும் ஸ்ரீராம் கிருஷ்ணனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு சார்ந்த வரம்புகளை நீக்குவதன் மூலம் அமெரிக்கா உலகளாவிய திறமைகளை வேகமாக ஈர்க்கவும், தக்கவைக்கவும் முடியும் என்பது தான் இவர்களின் அடிப்படை கருத்தாக உள்ளது.
யாருக்கெல்லாம் நன்மை: அமெரிக்கா, நாடு வாரியான ஹெச்-1பி விசா வரம்புகளை நீக்கினால், அமெரிக்காவில் பணிபுரிந்து தங்க விரும்பும் இந்திய தொழில்முனைவோர்களுக்கு இது பெரிய அளவில் பலன் அளிக்கும். திறமையான தொழிலாளர்கள் விரைவாக பணியில் சேர முடியும், தற்போது நடைமுறையில் உள்ள நாடு சார்ந்த வரம்பு காரணமாக நீண்ட காலமாக காத்திருக்க வேண்டியிருக்கும் நிலை நீங்கும்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் மாஸ்: ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் ஹெச்1பி விசாவில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது தான் தற்போது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அதேபோல் டிரம்ப் அதிகப்படியாக இடதுசாரி கொள்கைக்கு ஆதாரவளிக்கும் நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்கும் காரணத்தால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications