உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகவும், ஜிடிபி அளவில் பல தசாப்தங்களாக முதல் இடத்திலேயே இருக்கும் அமெரிக்கா அரசின் சவ்ரின் பாண்ட் அவுட்லுக்-ஐ மூடிஸ் உட்பட 3 சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் குறைந்துள்ளது. இது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் 2024 ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகவும் விளங்குகிறது.
ஜோ பைடன் தலைமையிலான அரசின் சில வாரங்களுக்கு அமெரிக்காவின் ஷட்டவுன் பிரச்சனையைக் கடைசி நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுக் கூடுதல் கடன் பெற அனுமதி வாங்கிப் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியது. இது மட்டும் அல்லாமல் 2023 ஆம் ஆண்டுக்கு அமெரிக்க அரசின் நிதி பற்றாக்குறை 1.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதைச் சமாளிக்க இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கூடுதல் கடன் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் அமெரிக்காவின் ஜிடிபி 26.23 பில்லியன் டாலராக இருக்கும் வேளையில் அமெரிக்க அரசு கணக்கில் சுமார் 33.7 பில்லியன் டாலர் அளவிலான கடன் உள்ளது. இதன் மூலம் அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,00,696 டாலர கடன் உள்ளது. இதேபோல் அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்க அரசு கூடுதல் செலவுகளை எதிர்கொண்டு வருகிறது.
உலகின் முன்னணி நாடுகளில் சராசரியாக மருத்துவச் செலவுகள் 6,414 டாலராக இருக்கும் வேளையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான அளவான 12,555 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசின் வருமானத்தை ஒப்பிடுகையில் செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது, இதனால் வருடாந்திர அடிப்படையில் அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தான் மூடிஸ் அமைப்பு அமெரிக்காவின் சவ்ரின் டெபிட்-ன் அவுட்லுக்-ஐ நெக்டிவ் ஆக மாற்றியுள்ளது. ஆகஸ்ட் மாதம் பின்ச் அமைப்பு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சவ்ரின் டெபிட் ரேட்டிங்-ஐ AA+ அளவில் இருந்து AAA ஆகக் குறைத்த, இதை மூடிஸ் அமைப்பும் ஏற்ற பாசிடிவ் அவுட்லுக்-ஐ மட்டுமே கொடுத்த நிலையில் தற்போது அவுட்லுக்-ஐ நெக்டிவ் ஆகக் குறைத்துள்ளது.

இந்த அவுட்லுக் குறைப்பிற்கு முக்கியமான காரணமாக அமெரிக்காவின் நிதியியல் ஆரோக்கியத்தை முன்வைக்கப்படுகிறது. இதில் ஜிடிபி-ஐ காட்டிலும் அதிகக் கடன், நிதிப் பற்றாக்குறை அளவில் உயர்வு ஆகியவையும் அடங்கும்.
மேலும் அமெரிக்காவின் நிதி நிலை உடன் அமெரிக்க அரசியல் பிரச்சனையும் பெரும் பாதிப்பை ஏற்படும் என மூடிஸ், பின்ச், Standard & Poor ஆகியவை தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் சர்வதேச முதலீட்டாளர்களுக்குப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவுகள் கண்டிப்பாகப் பாதிக்கப்படும் என எச்சரித்து ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் அரசு பத்திரத்தின் ரேட்டிங்-ஐ குறைத்து AA+-இல் இருந்து குறைத்து AAA ஆக அறிவித்துத் தற்போது நெகட்டிவ் அவுட்லுக்-ஐ கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications