அமெரிக்காவில் முன்னணி கிரிப்டோகரன்சி தளமான FTX 2022 ல் திவாலாகி முடங்கிய பின்பு சில்வர்கேட் என்ற வங்கி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது பலருக்கும் நினைவிருக்கும், இங்கிருந்து துவங்கிய அமெரிக்க வங்கி நெருக்கடிகள் பெடரல் ரிசர்வ்-ன் தொடர்ந்து வட்டி விகித உயர்வால் அடுத்தடுத்து 3 வங்கிகள் மாட்டிக்கொண்டது.
சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் வங்கி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் என 3 வங்கிகள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதில் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ வெறும் 500 மில்லியன் டாலர் தொகைக்கு First Citizens Bank கைப்பற்றியது, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் 10 வங்கிகள் ஒன்றாக இணைந்து கடன் கொடுத்து காப்பாற்றியது மூலம் வங்கி திவாலாகும் அச்சம் குறைந்து முதலீட்டாளர்கள் நிம்மதியாக உள்ளனர்.

இந்த நிலையில் 2008 நிதி நெருக்கடி அதாவது ரெசிஷனை சரியாகக் கணித்த பொருளாதார நிபுணரான நூரியல் ரூபினி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதிகப்படியான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திவாலாவதை அமெரிக்கா பார்க்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
ரூபினி மேக்ரோ அசோசியேட்ஸ் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் நூரியல் ரூபினி தற்போதைய காலக்கட்டத்தில் வங்கி அமைப்பில், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளில் கடன் நெருக்கடியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பொதுவாக பிராந்திய வங்கிகள் வீடுகள், பெருநிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன் கொடுக்கும். இனி வரும் காலக்கட்டத்தில் பிராந்திய வங்கிகளில் கடன் வழங்கும் எண்ணிக்கை குறையும்.
அமெரிக்காவில் சமீபத்தில் வங்கிகள் சிக்கல்கள் என கூறுவது அனைத்தும் சந்தை அல்லது கால ஆபத்து என்பது தான் அதாவது வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் அதன் நீண்ட கால பத்திரங்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது தான்.

ஆனால் தற்போது சந்தை அபாயத்திலிருந்து, கடன் அபாயத்திற்குச் அமெரிக்க வங்கியியல் துறை செல்கிறது. இப்போது வங்கி அமைப்பில் கடன் நெருக்கடி பிரச்சனை உருவாக துவங்கியுள்ளது, குறிப்பாக பிராந்திய வங்கிகள் வீடுகள், பெருநிறுவனங்கள், வணிகங்கள், வணிக ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற்கு கடன் கொடுப்பதில் பாதிப்பு உருவாகும்.
வால் ஸ்ட்ரீட்-ல் 'டாக்டர் டூம்' என்ற செல்லபெயருடன் அழைக்கப்படும் ரூபினி, அமெரிக்க வங்கி அமைப்பில் கடன் நெருக்கடி தீவிரமடைவதால், அமெரிக்க பொருளாதாரத்தில் ரெசிஷன் ஏற்படும் என்று கூறினார்.
இதேபோல் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையும் மிகவும் இருக்கமாக உள்ளது, இகனால் அமெரிக்காவில் சம்பள பணவீக்கமும் அதிகரித்து பெரும் சுமையாக மாற துவங்கியுள்ளது. அமெரிக்காவில் பல மாநிலத்தில் தொழிலாளர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications