அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்ட வேலை தேடும் தளமான இண்டீட் அதன் மொத்த ஊழியர்களில் 2200 ஊழியர்கள் அல்லது 15% பணி நீக்கம் செய்துள்ளது.
இது கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பணியமர்த்தி வந்த நிலையில், தற்போது தேவையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில் செலவு குறைப்பு நடவடிக்கையில் இருந்து வருகின்றது.
சம்பள குறைப்புமா?
பணி நீக்கம் மட்டும் அல்ல, சம்பள குறைப்பையும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் அடிப்படை ஊதியத்தில் 25% குறைப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முன்னதாக இருந்த வேலை வாய்ப்புகளை விட குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
அமெரிக்க நிறுவனமான இது பெரும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற பணி நீக்க நடவடிக்கையினை நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
தொடர்ந்து அமெரிக்காவின் வட்டி விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரமும் சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கோண்டு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இது பணி நீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
இனியும் தொடரலாம்
ஆக நடப்பு நிதியாண்டில் இண்டீட்-ன் தேவையானது சரிவினைக் காணலாம். இந்த போக்கு 2024ல் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு செலவு குறைப்பு நடவடிக்கையினை தூண்டலாம். இதன் காரணமாக பணி நீக்கம் என்பதும், சம்பள குறைப்பும் இருக்கலாம்.
இன்னும் மோசமாகலாம்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. குறிப்பாக டெக் துறையில் இந்த பணி நீக்கம் என்பது மிகப்பெரியளவில் இருந்து வருகின்றது. இது இனியும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது டெக் துறையை தாண்டி பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. இனியும் மேற்கோண்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதம் அதிகரிக்கும்போது இன்னும் இந்த மோசமான நிலையை தூண்டலாம்.


Click it and Unblock the Notifications