உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் சாஸ், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குச் சுமார் 16 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜேபி மோர்சன் சாஸ் அறிவித்துள்ள 16 மில்லியன் டாலர் தொகையில் சுமாப் 3.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்நிறுவன ஊழியர்களுக்காக மட்டுமே அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 35,000 ஊழியர்களை வைத்து இந்திய வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பணியாற்றி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து 3.8 மில்லயன் டாலர் அளவிலான தொகையைக் கொரோனா நிதியாக அறிவித்துள்ளது.
ஜேபி மோர்கன் சாஸ் ஊழியர்கள்
ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவரான பிலிப்போ கோரி நிர்வாகத்திற்குள் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வர்த்தகத்தில் பணியாற்றும் 35,000 ஊழியர்களின் நலன் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காகச் சுமார் 3.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், கூடுதலாக 10 மில்லியன் டாலர் அளவிலான தொகை இந்திய மக்களுக்கு உதவுவதாகவும் தெரித்துள்ளார்.
ஊழியர்கள் மகிழ்ச்சி
மேலும் ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதியே 2 மில்லியன் டாலர் தொகையை இந்திய மக்களுக்கு உதவ அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் அறிவிப்பு மூலம் 35,000 ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது மட்டும் அல்லாமல் நெகிழ்ந்துள்ளனர்.
மருத்துவ உதவிகள்
இந்தத் தொகையை வைத்துப் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மருத்துவ உதவி, 24X7 ஆம்புலன்ஸ் சேவை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ நிறுவனங்களுடன் கூட்டணி, ஹோட்டல், மருத்துவமனை, வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், டாக்டர் ஆன் கால் வசதி, தடுப்பு மருந்து ஆகியவற்றை 35,000 ஊழியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவரான பிலிப்போ கோரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து
இதேபோல் இந்தியாவில் தனது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து பெற வேண்டும் என்பதற்காக அரசுக்குப் பல வகையில் உதவி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனம் இந்த உதவிகளை ஒவ்வொரு ஆண்டும் செய்யும் 32 மில்லியன் டாலர் மதிப்பிலான நன்கொடை செயல்களுக்குக் கீழ் செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications