அமெரிக்காவில் பொது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சீனா - அமெரிக்கா மததியிலான வர்த்தக போர் பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்க அரசு சீனாவில் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் வாங்கவோ அல்லது தடை செய்யவோ விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான DJI அமெரிக்காவில் தடை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

சீன தொழில்நுட்ப நிறுவனங்களை கடுமையாக கண்காணித்து வரும் அமெரிக்க அரசு, தற்போது ட்ரோன் உலகின் முன்னணி நிறுவனமான DJI மீது கடும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆற்றல் மற்றும் வர்த்தகக் குழு (House of Energy and Commerce Committee) கடந்த மாதம் ஒரு மசோதாவை முன்வைத்துள்ளது. இந்த மசோதா, அமெரிக்க தொலைத்தொடர்பு ஆணையத்தின் (FCC) தடைசெய்யப்பட்ட தகவல் தொடர்பு உபகரணங்கள் பட்டியலில் DJI ட்ரோன்களை சேர்க்க கோரிக்கை முன்வைத்தது.
இந்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் DJI ட்ரோன்கள் தடை செய்யப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
"கவுன்டரிங் சிசிபி ட்ரோன்ஸ் ஆக்ட்" (Countering CCP Drones Act) என்ற இந்த மசோதா, 2019 ஆம் ஆண்டின் "பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் தொடர்பு நெட்வொர்க் சட்டம்" (Secure and Trusted Communications Networks Act of 2019) உடன் இணைந்து செயல்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் தகவல் தொடர்பு சேவைகள் அமெரிக்க நெட்வொர்க்கில் இயங்குவதை இந்த சட்டம் தடை செய்கிறது. மேலும், பட்டியலில் இருக்கும் நிறுவனங்களின் கருவிகள், உபகரணங்களை வாங்குவதற்கு அரசு நிதியைப் பயன்படுத்துவதையும் தடை செய்கிறது.
இப்பட்டியில் ஏற்கனவே HUAWEI மற்றும் ZTE போன்ற சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கா DJI நிறுவனத்தை தடை செய்தால் அதன் நட்பு நாடுகளும் தடை செய்யும்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர் எலிஸ் ஸ்டெஃபானிக் (Elise Stefanik), "DJI நிறுவனம் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது. சீனாவால் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் அமெரிக்காவிலிருந்து நீக்கப்பட வேண்டிய நேரம் இதுதான்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications