அமெரிக்க அதிபரான டெனால்டு டிரம்ப் ஒவ்வொரு நாடுகளை குறிவைத்து வரிகளை விதித்து கடிதம் அனுப்பி வரும் வேளையில், இந்தியாவுக்கு இதவரையில் எவ்விதமான கடிதமும் அனுப்பவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்தியா அமெரிக்க அரசுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரிக்ஸ் நாடுகள் (இந்தியா உட்பட) மீது 10 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்த டிரம்ப், 2வது அதிர்ச்சி செய்தி அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிபப்ளிக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் மற்றும் டெமாக்ரட் கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைச் சட்டம் 2025 என்ற மசோதா மூலம் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து காத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த மசோதாவில் இருக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரியை விதிக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரை உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.
எதற்காக இந்த மசோதா?:
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யாவை தண்டிக்கும் நோக்கம் உடன் இந்த The Sanctioning Russia Act of 2025 மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளத. இந்த மசோதாவில் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் அனைத்து விதமான எரிசக்தி பொருட்களும் அடக்கம் என்பதால் இதில் எரிவாயு, யுரேனியமும் இதில் அடக்கம்.
இது வெறும் ஒரு கட்சியினர் தாக்கல் செய்யும் மசோதா இல்லை, இரு கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து ஆதரவு அளித்து தாக்கல் செய்யப்படும் மசோதா என்பதால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது.
ஆனால் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா, உலகளாவிய வர்த்தக உறவுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்யாவின் நட்பு நாடுகள், உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து, மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகிறது. இது உக்ரைன் உடன் ரஷ்யா போர் தொடுக்க நிதியுதவி செய்யும் வகையில் அமைவதாக அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகியவை பல வருடங்களாக குற்றம்சாட்டி வருகிறது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 35% ரஷ்யாவிலிருந்து பெற்ற நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைப்படும்.
இந்த மசோதாவின் மூலம் அமெரிக்கா ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கவும், இதன் மூலம் ரஷ்யா உடனான வர்த்தக தொடர்பை துண்டித்து அந்நாட்டிற்கு பொருளாதார அழுத்தத்தை உருவாக்கி, ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்க முயற்சி செய்கிறது. ஆனால், டிரம்ப் இந்த மசோதாவின் செயல்பாட்டில் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புவதால், இதற்கு தற்போதைய நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த மசோதாவின் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையாக உள்ளது.
இந்தியாவை எப்படி பாதிக்கும்?:
இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் காரணத்ததால், நாட்டின் எரிசக்தி செலவுகளை குறைத்தது. ஆனால், புதிய அமெரிக்க மசோதாவின் 500% இறக்குமதி வரி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை பெருமளவு உயர்த்தும், இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையான பொருளாதார சவால்களையும், வர்த்தகம் - வருமான இழப்பை எதிர்கொள்வார்கள்.
அதிலும் குறிப்பாக இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகளான ஜவுளி, மருந்து, மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும்.
இதேவேளையில் இந்தியா ரஷ்ய எண்ணெய்யை விடுத்து வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க விரும்பினால் செலவுகளை உயர்த்தி, பணவீக்க பாதிப்பை உருவாக்கலாம். இந்த மாற்றங்கள், இந்திய மக்களுக்கான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications