அமெரிக்க அரசு பொருளாதார கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வர டிரம்ப் தலைமையிலான நிர்வாக முயற்சி செய்தி வருகிறது. எந்தொரு நாடாக இருந்தாலும் தனது மொத்த வருமானத்தில் தனிநபர்களிடம் இருந்து கிடைக்கும் வருமான வரி முக்கியமானதாக இருக்கும், இந்தியாவில் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் வரி விமானத்தை காட்டிலும் தனிநபரிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் அதிகம் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம். அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான், வருமான வரியில் இருந்து அதிகப்படியான நிதி ஆதாத்தை அந்நாட்டு அரசு பெறுகிறது.
இப்படியிருக்கும் நிலையில் டிரம்ப் தலைமையிலான நிர்வாக அமெரிக்க குடிமக்களுக்கும் வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்யும் திட்டம் குறித்து விவாதித்து வருகிறது. இந்த வருமான வரியை குறைப்பது மூலம் மக்கள் கையில் அதிகப்படியான நிதி ஆதாரத்தை அளிக்க முடியும் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என டிரம்ப் அரசு கணக்குப்போடுகிறது.

இதேபோல் வருமான வரி அரசின் நிதி ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், இதை ரத்து செய்தால் பெரிய ஓட்டை கஜானாவில் விழும். இதை ஈடுக்கட்ட டிரம்ப் அரசு இறக்குமதி வரி விதிப்பை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகள் மீது வரியை விதிப்பது மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவது மட்டும் அல்லாமல் வருமான வரி ரத்து செய்வது மூலம் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் முடியும் என டிரம்ப் அரசு நம்புகிறது.
1870 முதல் 1913 வரையிலான காலகட்டத்தில் அதிகப்படியான இறக்குமதி வரி அடிப்படையாகக் கொண்ட வர்த்தக முறை அமெரிக்காவில் இருந்தது, இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் நிதியளவில் வலுவாகவும், கணிசமான வருவாயை வரி மூலம் உருவாக்கியது என்றும் டிரம்ப் பேசியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவை மீண்டும் உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த முறை கட்டாயம் வெற்றிகரமான திட்டமாக இருக்கும் என்று டிரம்ப் அரசு கூறியுள்ளது.
வருமான வரியை நீக்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய இறக்குமதி வரியை உயர்த்தும் உத்தி, அமெரிக்க குடிமக்களுக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு வரி சுமையை விதிக்கும். "வெளிநாடுகளை வளப்படுத்த நம் குடிமக்களை வரி விதிப்பதற்கு பதிலாக, நம் குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்க வேண்டும்" என்று அமெரிக்க அதிபரான டிரம்ப் திங்கட்கிழமை நடைபெற்ற House Republican Members மாநாட்டில் பேசினார்.
அமெரிக்க அரசின் இந்த புதிய பொருளாதார திட்டம் கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சுமையிலிருந்து தனிநபர்களை விடுவிப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என ஒரு கூட்டம் கூறினாலும், இதனால் ஏற்படும் சர்வதேச வர்த்தக பாதிப்புகள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை நீண்ட கால அடிப்படையில் பாதிக்கும் எனவும் ஒரு கூட்டம் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன மறக்கமால் கமெண்ட் பதிவிடுங்கள்.
உலகில் பல நாடுகள் தனிநபர் மீது வருமான வரி விதிக்காமல் இயங்கி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹாமாஸ், கேமன் தீவுகள், பெர்முடா, மொனாக்கோ, பஹ்ரைன், கத்தார், குவைத், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், வனுவாடு, புருனே, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஓமன், துருக்கியர்கள் மற்றும் கைகோஸ், சவுதி அரேபியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அங்குவிலா, மாலத்தீவுகள், சோமாலியா, நவ்ரு, பனாமா, அன்டோரா, நிகரகுவா ஆகிய நாடுகள் தனிநபர் மீது வருமான வரி விதிக்காமல் இயங்கி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications