உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அமெரிக்க தலைமையிலான ஜி7 நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சில நாட்கள் முன்பு கூட அமெரிக்க அரசு சுமார் 250 ரஷ்ய மற்றும் ரஷ்யாவுக்கு சர்வதேச விதிகளை மீற உதவும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பலரை தடை செய்தது.
இந்த புதிய தடை உத்தரவு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்த பின்பு வெளியானது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்பு பல்வேறு தடைகள் இருந்தாலும், தொடர்ந்து இயல்பாகவே இயங்கி வந்தது ரஷ்யா வர்த்தக சந்தை. ஆனால் உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரல் 60 டாலர் மட்டுமே என விலை நிர்ணயம் செய்த பின்பு தான் பிரச்சனை துவங்கியது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய காலத்தில் இருந்து இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது, இதுக்குறித்து ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தாலும், அமெரிக்கா இதுவரையில் எவ்விதமான கேள்வியும் முன்வைக்கவில்லை என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. இந்த கேள்விக்கான பதில் தான் தற்போது வந்துள்ளது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள 60 டாலர் விலைக்கு குறைவாக இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இதுவரையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என அமெரிக்க அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
60 டாலர் விலை கட்டுப்பாடு
இதன் மூலம் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள 60 டாலர் விலைக்கு கீழ் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது. ரஷ்யா இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு அதிகப்படியான தள்ளுபடி அளிக்கும் காரணத்தால் 60 டாலருக்கு குறைவான விலையில் வாங்கப்படுவதாக தெரிகிறது.
இந்தியா ரஷ்யா
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்கிறது போன்ற பல கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட இதேவேளையில் இந்தியா - ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் இந்தியா - அமெரிக்கா நட்புறவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் அதிரடியாக பதில் அளித்து அனைவரின் வாயை அடைத்தார்.
ஜி20 வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டம்
ஜி20 வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்காக டெல்லி வந்துள்ள அமெரிக்க அமைச்சர் Antony Blinken கட்டாயம் ரஷ்யா- உக்ரைன் போர், ரஷ்யாவின் ஆதிக்கம், கச்சா எண்ணெய் விநியோகம் ஆகியவற்றை குறித்து வெளிநாட்டு அமைச்சர்கள் உடன் கட்டாயம் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா முடிவு
பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் துணை பிரதமரான அலெக்சாண்டர் நோவக் வெளியிட்ட அறிவிப்பில் ரஷ்யா வருகிற மார்ச் மாதத்தில் இருந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 500000 பேரல் அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா மார்ச் 1 முதல் தனது உற்பத்தியை பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர் துவங்கியுள்ளது. WTI கச்சா எண்ணெய்-யின் ஏப்ரல்23 ஆம் தேதி பியூச்சர்ஸ் ஆர்டர் விலை ஒரு பேரல் 78.17 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 84.78 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications