அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்பட்ட அளவை விடவும் குறைவாக இருக்கும் காரணத்தால் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வல்லரசு நாடா அமெரிக்கா தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில் நவம்பர் மாதம் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புச் சந்தையில் கணிக்கப்பட்ட அளவை விடவும் மிகவும் குறைந்த வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளது.
நவம்பர் மாதம்
அமெரிக்காவில் விவசாயம் அல்லாத துறையில் அக்டோபர் மாதம் 6,10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 4,60,000 அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 2,45,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
இதனால் அமெரிக்காவில் நவம்பர் மாதம் வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை அளவீடு 6.7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவில் இருந்து மீண்டு வர இன்னும் 4 ஆண்டுகள் தேவைப்படும் எனக் கணிக்கடப்பட்டுள்ளது.
7 மாத தொடர் உயர்வு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 7 மாதமாக வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது கணிப்புகளைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவான வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்
வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு புதிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதியியல் உதவியை அரசு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் போதுமான நிதி உட்செலுத்துதல் இல்லாமல் தொடர் சரிவை அடைந்து வருகிறது எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
908 பில்லியன் டாலர்
இதேவேளையில் அமெரிக்க அரசு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த சுமார் 908 பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க ஆலோசனை செய்து வருகிறது.
இத்திட்டத்தில் குறிப்பிடதக்க அளவிலான தொகை வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் நிதி திட்டத்திற்குச் செல்ல உள்ளது.
இந்தியாவில் என்ன நிலை..
பொருளாதாரச் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வரும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் 6.51 சதவீதமாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 6.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை வெறும் 1.1 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications