அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு நல்ல விஷயம்.. விசா நடைமுறையில் தளர்வுகளா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு விசா தொடர்பான நடவடிக்கைகளில் தளர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்கா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் மிக நல்லதொரு செய்தியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வதானாலும் சரி, படிப்பதற்காக மாணவராக சென்றாலும், அதில் அதிகளவில் இந்தியர்களே இருப்பர். அந்தளவுக்கு பாரம்பரியமாக இந்தியர்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு சுமூக உறவு உண்டு.

குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பலருக்கும் அமெரிக்கா என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும்.

சிக்கலில் உள்ள அமெரிக்கா.. ஜோ பைடன் அரசு என்ன செய்ய போகிறது? சிக்கலில் உள்ள அமெரிக்கா.. ஜோ பைடன் அரசு என்ன செய்ய போகிறது?

சனிக்கிழமையும் நேர் காணல்

சனிக்கிழமையும் நேர் காணல்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசாவுக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கான நேர்காணலில், சில சலுகைகளை திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகின்றது. குறிப்பாக முதல் முறையாக விசாவுக்காக காத்திருப்பவர்களுக்கான நேரத்தை குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டும் அல்ல சனிக்கிழமையன்றும் கூட சிறப்பு நேர் காணல் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேரத்தை மிச்சப்படுத்த திட்டம்

நேரத்தை மிச்சப்படுத்த திட்டம்

விண்ணப்பதாரர்கள் டெல்லியில் உள்ள தூதரகம், மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத்தில் உள்ள தூதரங்களுக்கும் சென்று விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அறிவித்துள்ளது. இது நேரத்தினை மிச்சப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகின்றது.

தொலைவில் இருந்து பணியாற்றலாம்

தொலைவில் இருந்து பணியாற்றலாம்

முந்தைய அமெரிக்கா விசா கொண்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் இல்லை என்றும், அவர்கள் தொலைவில் இருந்தே செயல்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாஷிங்டன்னில் இருந்து பல தற்காலிக தூதரக அதிகாரிகள் செயலாக்கத்தினை அதிகரிக்க இந்தியா வருவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

அதிகாரிகள் அதிகரிக்கப்படுவார்கள்

அதிகாரிகள் அதிகரிக்கப்படுவார்கள்

மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரகம் மற்றும் தூதரகங்களுக்கு நிரந்தரமாக நியமிக்கப்படும், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க மிஷன் 2.5 லட்சம் கூடுதல் பி1 விசா மற்றும் சுற்றுலா விசாவான பி2 விசாவினையும் அறிவித்துள்ளது. ஆக இதனை விரைவில் செயலாக்கம் செய்யும் விதமாக அமெரிக்க துணைத் தூதரகம் மும்பை தனது வார நாள் வேலை நேரத்தையும் கூட அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் கருத்து

அமெரிக்காவின் கருத்து

அமெரிக்காவின் இந்த முயற்சியின் மூலம் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு, விசாக்களை செயல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் இந்த செயலாக்க நிகழ்வுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது உலகளவில் பல நாடுகளில் மந்த நிலை இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய செயல்பாடுகளை அமெரிக்கா தொடங்கியிருக்கலாம்.

பலரும் பலன் பெறலாம்

பலரும் பலன் பெறலாம்

இது அமெரிக்காவின் தேவையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம். பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், மாணவர்கள், ஊழியர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பெரும் பலன் பெறுவார்கள். அமெரிக்காவின் அதிரபராக ஜோ பைடன் பதவிக்கு வந்த பிறகு விசா நடைமுறைகளில் பெரும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது ஐடி ஊழியர்களுக்கு சாதகமாக இருந்தது. எனினும் தற்போது ஐடி ஊழியர்கள் பலன் பெரும் ஹெச்1 பி விசா குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA plans to cut visa time for Indians: its may boost up first time applicants

USA plans to cut visa time for Indians: its may boost up first time applicants
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X