2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு எனக் குறிப்பிடும் அளவுக்கு பல்வேறு நாடுகளும் பொது தேர்தல்களை சந்தித்தன. இந்தியாவில் கூட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமரானார்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகும். நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் களம் கண்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

முதலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் தான் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய வயது மற்றும் உடல்நிலை காரணமாக தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட முடியவில்லை இது கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கமலஹாரிஸ் தான் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
இந்த தேர்தலில் பல்வேறு பரபரப்புகள் நிலவின. இதில் குறிப்பிடத்தக்கது, டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை தாக்குதல். ஜூலை மாதம் 13ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் மீது படுகொலை முயற்சி நடைபெற்றது. அவர் அந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருடைய இடது காதில் காயம் ஏற்பட்டது. இது அவருக்கு அனுதாபத்தை தேடி தந்தது.
இது தவிர டொனால்ட் டிரம்புக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் பெருமளவில் ஆதரவு தந்தனர். அவர்களின் குறிப்பாக ஸ்பேக் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தன்னுடைய முழுமையான ஆதரவை டொனால்ட் டிரம்புக்கு வழங்கினார். அது மட்டுமில்லாமல் பெருமளவிலான தொகையை தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் நன்கொடையாக வழங்கினார்.
இது டொனால்ட் ட்ரம்புக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொருத்தவரை அமெரிக்க பொருளாதாரம், சுகாதாரத்துறை, வெளிநாட்டு கொள்கை மற்றும் முறைகேடாக அமெரிக்காவில் குடியிருப்பவர்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தன. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்றும் அமெரிக்காவில் தொழில்துறைகை மேம்படுத்துவேன் என்றும் வாக்குறுதி அளித்தார் டிரம்ப்.
இந்த நிலையில் அமெரிக்கர்கள் டொனால்ட் ட்ரம்புக்கு தான் பெருமளவிலான ஆதரவை வழங்கியுள்ளனர். டொனால்ட் டிரம்ப் 312 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளையும் பெற்றிருந்தார். இதனை அடுத்து டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார். ஜனவரி மாதம் அவர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications