அமெரிக்க வைத்த செக்.. சீனாவின் திடீர் முடிவு.. உஷாரான இந்தியா..!!

அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஏற்கனவே டிக்டாக் மீது தடை, சீனாவின் செமிகண்டக்டர் சிப் துறை வளர்ச்சியை முடக்கும் நடவடிக்கைகள் என பல நெருக்கடியை அமெரிக்கா சீனாவுக்கு கொடுத்து வருகிறது.

இந்த வேளையில் அமெரிக்க அரசு, சீன நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 14 பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது. இதனால் சீனா அதிரடியாக முடிவுகளை எடுக்க துவங்கியுள்ளது.

அமெரிக்க வைத்த செக்.. சீனாவின் திடீர் முடிவு.. உஷாரான இந்தியா..!!

அமெரிக்கா, சீனாவிலிருந்து அந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs), பேட்டரிகள் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியாவில் சீனப் பொருட்கள் அதிகளவில் குவிக்கப்படும் ஒரு dumping groundஆக மாறக்கூடும் என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான Global Trade Research Initiative (GTRI) செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

"எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் பிற பல புதிய தொழில்நுட்ப பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தியுள்ளது, இதன் காரணமாகச் சீனா இந்த பொருட்களை இந்தியா உட்பட பிற சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். இதனால் இந்தியாவின் வர்த்தக நிவாரண துறை (Directorate General of Trade Remedies) மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது" என்று GTRIஅமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா பொருட்கள் மீது அமெரிக்கா அதிகப்படியான வரியை விதித்திருக்கும் இந்த வேளையில், தேவைக்கேற்ப பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் மேம்படுத்த முடியும்" என்று GTRI-ன் இணை நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

GTRI அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் நிதியாண்டில் சீனா இந்தியா மத்தியில் 118.4 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்துடன் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவைத் தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்ற பொருட்களில் இந்தியாவுக்கு ஏற்றுமதிக்கான எந்தவொரு வாய்ப்பு இல்லாமல், பெரிய இறக்குமதியாளராக உள்ளது. இதனால் இப்பிரிவை டார்கெட் செய்து சீனா மலிவு விலை பொருட்களை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்கள், ஊசி மற்றும் மருத்துவ கையுறைகள் மற்றும் இயற்கை கிராஃபைட் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரிகளை இந்தியா அதிகமாக விதித்துள்ள காரணத்தால், இந்தியா தனது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் சீனாவை நம்பி இருப்பதைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா, தேங்கி நிற்கும் தனது ஏற்றுமதி மற்றும் சீனாவிலிருந்து அதிகரித்து வரும் இறக்குமதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சீனாவை எதிர்கொள்ளத் திட்டமிட வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+