வாஷிங்டன்: அமெரிக்க அரசு H-1B விசாக்களுக்கான இரண்டாவது லாட்டரி குலுக்கல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 2025 நிதியாண்டுக்கான H-1B விசாக்களுக்கு மார்ச் மாதம் நடந்த முதல் குலுக்கலில் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்யும் பெரும்பாலான மக்கள் ஐடி சேவை மற்றும் டெக் துறையினராக இகுக்கும் வேளையில், இந்த 2வது வாய்ப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த முறை நடத்தப்படும் குலுக்கலில் முதுகலை பட்டதாரிகளுக்கான H-1B விசாக்களுக்கு குலுக்கல் நடத்தப்படாது என USCIS அமைப்பு அறிவித்துள்ளது. ஏனெனில், முதல் குலுக்கலிலேயே இப்பிரிவினருக்கு அளிக்கப்படும் விசாவில் போதிய எண்ணிக்கை விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில் லக் முக்கியமானதாகச் செயல்படுகிறது.

ஆனால், H-1B விசாக்களுக்கான பொது பிரிவில் போதி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அடுத்தகட்ட தேர்வு பணியில் விசா பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரம்பை முழுமையாக முடிக்க இரண்டாவது குலுக்கல் பணி துவங்க உள்ளது. இந்த குலுக்கலில், முதல் குலுக்கலில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் உட்படுத்தப்படுவார்கள். இதனால் இந்த ஆண்டு ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய சான்ஸ் கிடைத்துள்ளது.
அமெரிக்க அரசின் குடியுரிமை அமைப்பு தான் இந்த USCIS, இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் மாதம் 2025 நிதியாண்டுக்கான H-1B விசாக்களுக்கு முதல் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அரசின் வருடாந்திர இலக்கை முதல் குலுக்கலில் எட்ட முடியாத காரணத்தால், கூடுதல் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய, இரண்டாவது குலுக்கல் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு அந்நாட்டில் இருக்கும் திறன் பற்றாக்குறையைச் சரி செய்ய வருடத்திற்கு 65000 வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசா அளிக்கிறது. இந்த 65000 எண்ணிக்கை முதல் குலுக்கலில் எட்ட முடியாத காரணத்தாலேயே 2வது குலுக்கல் நடக்கிறது. முதல் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பல்வேறு காரணத்தால் ரிஜெக்ட் செய்யப்பட்டு இருக்கும் காரணத்தால் 2வது குலுக்கலுக்கான அவசியம் உருவாகியுள்ளது.
USCIS அமைப்பின் இந்த அறிவிப்பு இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான IT ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. H-1B விசா பெறுவது இந்தியர்களுக்கு மிகவும் போட்டி நிறைந்ததாக உள்ளது. இரண்டாவது குலுக்கல் நடத்துவதால், மேலும் பலருக்கு அமெரிக்காவில் வேலை செய்யவும், கூடுதல் வருமானத்தைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் 2வது குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு USCIS அமைப்பு முறையாக அறிவிப்பை வெளியிடும் என்பதால் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் ஸ்டேட்ஸ்-ஐ தொடர்ந்து செய்ய வேண்டும். 2வது குலுக்கல் நடத்துவது இது முதல் முறையில்லை, ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒன்று தான்.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications