கலிபோர்னியா: கடந்த சில மாதங்களாக தொடர்ந்து IT சேவை வழங்கும் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வந்தனர். இதனால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதனைக் கருத்தில் கொண்டு USCIS அமைப்பு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 60 நாட்களுக்கு மேல், சில நிபந்தனைகளின் கீழ் அமெரிக்காவில் தங்கலாம் என்று கூறியுள்ளது.
கூகுள், மெட்டா, ஆப்பிள், டெல், ட்விட்டர், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களை (non - immigrant visa) பணிநீக்கம் செய்துள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பொதுவாக 60 நாட்கள் வரை அமெரிக்காவில் இருக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B விசா கொண்ட ஊழியர்கள் 60 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் இருக்கலாம் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியரசு தேவைகள் அமைப்பு (USCIS) தெரிவுத்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் 60 நாட்களுக்கு மேல் கூட அமெரிக்காவில் இருக்கலாம் என்று USCIS சமீபத்திய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதற்காக அவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றினால், அவர்கள் 60 நாட்களுக்கு மேல் அமெரிக்காகவில் தங்க முடியும்.
ஒவ்வொரு மாதமும் IT துறையில், தொடர்ந்து பணிநீக்கம் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக 2024ஆம் ஆண்டில் மொத்தம் 237 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 58,499 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர்.
USCIS அறிவிப்பின்படி, H-1B விசா கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள், கீழ்காணும் வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை செய்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 60 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
1. புலம்பெயர்ந்தோர் அல்லாத நிலையை மாற்ற விண்ணப்பிக்கலாம்.
2. ஊழியர்கள் ஒரு வருட வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
3. முதலாளியை(company) மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் பணிநீக்கம் செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் 60 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியும்.
குறிப்பிடப்பட்ட 60 நாட்களுக்குள், வெளிநாட்டு ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வேலை செய்பவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் 60 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications