டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 100 தொட்டால்.. என்னாகும் தெரியுமா..?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆர்பிஐ மற்றும் வங்கிகள் இணைந்து ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த FCNR-B வைப்பு நிதியின் கீழ் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்தும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது.

இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு 96.78 ரூபாயை தொட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு 100 ரூபாய் அளவீட்டை தொட்டால் என்னாகும்..?

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 100 தொட்டால்.. என்னாகும் தெரியுமா..?

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 100 ரூபாய் என்பது வெறும் எக்ஸ்சேஞ்ச் ரேட்டாக இல்லாமல் முதலீட்டு சந்தையில் உளவியல் அளவுகோலை தாண்டியதாக பார்க்கப்படும். இது முதலீட்டு சந்தையை தாண்டி நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 100 ரூபாய் அளவீட்டை தொட்டால் இந்திய பொருளாதாரத்தில் சரிவு, இறக்குமதி செலவு அதிகரிப்பு, பணவீக்கத்தால் மக்கள் தவிப்பு, முதலீட்டு சந்தையில் முதலீடுகள் வெளியேறுவது என அடுத்தடுத்து செயின் ரியாக்ஷன் நடக்கும். இதன் மூலம் மக்களின் முதலீட்டு மதிப்பு குறையும், கையில் இருக்கும் பணத்திற்கான மதிப்பு பணவீக்கத்தால் குறைக்கும்.

Also Read

மேலும் 100 என்ற அளவை ரூபாய் கடந்துவிட்டால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனமடையும். இதை கட்டுப்படுத்த முடியாது என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே அதிகரிக்கும். இதன் எதிரொலியாக இந்திய முதலீட்டு சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை அதிகப்படியாக வெளியேற்றுவார்கள், இதனால் ரூபாய் மதிப்பு கூடுதலாக சரிவடையும்.

ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் டாலர் இருப்பு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஆனால் இந்தியா பெரிய இறக்குமதி நாடு என்பதால் கச்சா எண்ணெய்யில் துவங்கி, தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள் என பல துறைகள் இறக்குமதியை மட்டுமே சார்ந்து இருக்கும் காரணத்தால் டாலர் இருப்பு வேகமாக குறைய கூடும். இதனால் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்துவது என்பது கடினமாகும்.

ஆனால் ரூபாய் மதிப்பு குறையும் போது ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவிலான சாதகமான சூழ்நிலை உருவாக்க முடியும். டாலரில் வருமானம் பெறும் இந்திய நிறுவனங்களுக்கு, அந்த டாலரை ரூபாயாக மாற்றும்போது அதிக லாபம் கிடைக்கும்.

Recommended For You

ஆனால் இந்தியாவில் ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவை கட்டுப்படுத்தும் அளவுக்கான ஏற்றுமதி நடக்கிறதா என்றால்.. இல்லை. இதனால் ரூபாய் மதிப்பு சரிவால் கிடைக்க வேண்டிய பலன் குறைந்து, இறக்குமதி செலவு அதிகரிப்பது மட்டுமே பெரிய பிரச்சினையாக மாறலாம்.

மேலும் நீண்ட கால அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து தேக்க நிலையை அடையும், இதை economic stagnation என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 100-ஐ கடந்தவுடன் ரூபாய் நிச்சயமாக வேகமாக சரியும் என்பது தெளிவாகியுள்ளது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ரூபாய் மதிப்பு சரிவால் பதிக்கப்படாத சொத்துக்களில் முதலீடு செய்து சேமிக்கலாம்.

உதாரணமாக தங்கம், டாலர் முதலீடு, அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு போன்ற முறைகளை தேர்வு செய்யலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் முதலீட்டு உத்தியாக பார்க்கக் கூடாது, காரணம் பலர் குறுகிய கால முதலீட்டு இலக்கை கொண்டு இருக்கும் காரணத்தால் இது சரியான தேர்வாக இருக்காது.

2024ஆம் ஆண்டு உலகம் முழுவதும் De-dollarization நடக்கும், இதனால் டாலர் தனது ஆதிக்கத்தை இழக்கும் என்ற கணிப்பு பரவலாக இருந்தது. ஆனால் டாலர் மதிப்பு இன்று வரையில் வலிமையாகவே இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+