AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட வேலைகளில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டு வந்து விட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தோடு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணி நீக்கம் , சம்பளம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர் .

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..!

தற்போது வேலைவாய்ப்பு சந்தை என்பது மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறது. நீங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இருக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களுடைய வேலைக்கு ஏற்ப ஏஐ கருவிகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்காமலே போய்விடும். சில சமயங்களில் பணி நீக்க நடவடிக்கைக்கும் நீங்கள் ஆளாக நேரிடலாம் . இது தான் உண்மையான கள நிலவரம்.

அசெஞ்சர் நிறுவனம், தங்களுடைய ஊழியர்களில் சுமார் 70% பேர் அதாவது 7,79,000 ஊழியர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ தொடர்பான அடிப்படை பயிற்சிகளை வழங்கி இருக்கிறது. இந்த ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்களை தான் தற்போது பணி நீக்கம் செய்வதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த ஒரு உதாரணமே டெக் நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..!

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் வேலையில் அன்றாடம் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என கூறிவிட்டன. ஊழியர்கள் கோடிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஏஐ கருவிகளை தான் பயன்படுத்த வேண்டும் எந்தெந்த ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்து மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என சுந்தர் பிச்சை அனைத்து கூகுள் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஊழியர்கள் ஏஐ கருவிகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர் , ஆனால் தற்போது அது கட்டாயம் என்ற நிலைக்கு வந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இக்னைட் டெக் என்ற அமெரிக்க நிறுவனம் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கான வேலையில் 20% -ஐ ஏஐ சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்காக ஒதுக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. மேலும் ஏஐ கருவிகளை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் இல்லையா என்பதையும் கண்காணிக்க தொடங்கி விட்டதா.

இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற டெக் நிறுவனங்கள் கூட ஊழியர்களுக்கு ஏஐ சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றன. அமெரிக்காவின் பிடபிள்யூசி, மெக்கன்சி போன்ற நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு வரக்கூடிய ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கின்றன. மேலும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதிலேயே ஏஐ திறன் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய தொடங்கியிருக்கின்றன .

லிங்குடின் வெளியிட்ட ஆய்வு தகவலில் வேலை வாய்ப்புக்காக வரக்கூடிய பதிவுகளில் ஏஐ அறிவு தேவை என்ற டிமாண்ட் 70% உயர்ந்துள்ளதாக கூறுகிறது. நிறுவனங்களை பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றி வருகின்றன. தங்களின் ஊழியர்களும் அதற்கேற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தற்போதைய இந்த போட்டி உலகில் நிலை நீடித்து நிற்க முடியாது என கருதுகின்றன . எனவே வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் புதிய ஏஐ அப்டேட்டுகளை பெற்று அதற்கேற்ப செயல்பட்டால் தான் வேலைவாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+