5 ஆண்டுகளில் 2,400% லாபம்.. முடிந்த அளவு பங்குகளை வாங்கும் உஷா மார்ட்டின் நிறுவன புரோமோட்டர்ஸ்

உஷா மார்ட்டின் நிறுவனம் ஸ்டீல் மற்றும் இரும்பு தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஸ்டீல் மற்றும் கம்பி ரோப் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும்.

மேலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டுகள் இப்பங்கின் விலை நேர்மறையாக (உயர்வு) முடிந்துள்ளது. நல்ல ஆதாயம் கொடுப்பதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்பதற்கு இந்த பங்கை சாட்சியாகும்.

5 ஆண்டுகளில் 2,400% லாபம்.. முடிந்த அளவு பங்குகளை வாங்கும் உஷா மார்ட்டின் நிறுவன புரோமோட்டர்ஸ்

2020 மார்ச் மாதத்தில் உஷா மார்ட்டின் பங்கு விலை ரூ.13.60 என்ற அளவில்தான் இருந்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.345ஆக இருந்தது. ஆக, கடந்த 5 அண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,436 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.

அதேசமயம் கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 296 சதவீதம் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் உஷா மார்ட்டின் பங்கு விலை ரூ.87 என்ற அளவில்தான் இருந்தது. 2021ம் ஆண்டில் இப்பங்கின் விலை 145 சதவீதம் உயர்ந்தது. 2023ம் ஆண்டில் உஷா மார்ட்டின் பங்கு விலை 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக உஷா மார்ட்டின் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் நிறுவனத்தில் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்து வருகின்றனர். புரோமோட்டர் குழும நிறுவனங்களில் ஒன்றான பிரிஜ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், உஷா மார்ட்டின் நிறுவனத்தின் 0.01 சதவீத பங்குகளை (19,000 பங்குகள்) வாங்கியது.

உஷா மார்ட்டின் நிறுவனம் இந்த தகவலை கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 3 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, உஷா மார்ட்டின் நிறுவனத்தில் பிரிஜ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 2.03 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதற்கு முன்பு, நிறுவனத்தின் புரோமோட்டர்ஸ் குழும உறுப்பினர்களான அமிஷா ஜாவர், ராஜீவ் ஜாவர், ஸ்துதி ஜாவர் மற்றும் பீட்டர்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவை நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கியிருந்தனர்.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் உஷா மார்ட்டின் நிறுவனம் வருவாயாக ரூ.2,046 கோடியும் நிகர லாபமாக ரூ.322 கோடியும் ஈட்டியிருந்தது. மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.565 கோடியும் நிகர லாபமாக ரூ.77 கோடியும் ஈட்டியுள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+