இந்திய மக்கள் அதிகம் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் இருக்கும் வேளையில் உலக கோப்பை போட்டிகள் முடிந்த கையோடு ஒட்டுமொத்த மக்களும் ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உலகில் வேறு எந்த நாட்டிலும், ஏன் கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தில் கூட இந்தியர்கள் மாதிரி கிரிக்கெட்டை நேசிப்பவர்களும் கொண்டாடுபவர்களும் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் கிரிக்கெட்டை நேசிப்பத்தை தாண்டி தங்களுக்கு பிடித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வணங்கி கொண்டாடுகின்றனர். சில ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் விதவிதமாக தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு அவரது ரசிகர் ஒருவர் தனித்துவமான பரிசை ஒன்றை வழங்கியுள்ளார். அந்த ரசிகர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர்.
கிரிக்கெட் வீரராக விராட் கோலி இந்த ஆண்டில் 15 ஆண்டுகள் நிறைவை செய்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு 1.04 காரட் வைரத்தையே கிரிக்கெட் பேட்டாக செய்து அந்த தொழிலதிபர் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த வைர ஆலையில் தயாரிக்கப்பட்ட வைரம் அல்ல இயற்கையான வைரம் என்றும் இந்த பேட்டின் விலை ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாகும் என்று தெரிகிறது. இந்த வைரம் கிரிக்கெட் பேட் தயாரித்தவர் பிரபல வைர நிபுணர் மற்றும் தொழிலதிபரான உத்பால் மிஸ்திரி.
உத்பால் மிஸ்திரி குஜராத்தை சேர்ந்தவர், இவர் இளம் பருவத்தில் படிப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். அகமதாபாத்தில் எம்.டி.பி. பட்டம் பெற்றார். பின் சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.டெக் பற்றம் பெற்றார். அவர் தங்க பதக்கம் பெற்றவர்.
படித்து முடித்தவுடன் அமெரிக்கா சென்று விட்டார். இருப்பினும் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பினார். பின்பு இங்கு சில நிறுவனங்களில் பணிபுரிந்து இருந்தார். இந்த சமயத்தில் வைர தொழிலில் இருந்த அவரது நண்பர் ஒருவர், மிக குறைந்த செலவில் வைரத்தை வெட்டி பாலிஷ் செய்யும் எந்திரத்தை உருவாக்க சொன்னார்.
இதனையடுத்து தனது 22வது வயதில் தனது எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பு அறிவோடு சர்வதேச தரத்தில் மெக்ஸி கட் என்ற ஒரு எந்திரத்தை வடிவமைத்தார். அதற்கு முன்பு வரை இந்த பணிக்காக பெல்ஜியத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.2 லட்சத்துக்கு ஒரு எந்திரத்தை இந்திய வைர நிறுவனங்கள் இறக்குமதி செய்து வந்தன.
மெக்ஸி கட் எந்திரத்தை உருவாக்கியதையடுத்து உத்பால் மிஸ்ரி மிகவும் பிரபலமானார். உள்நாட்டு வைர நிறுவனங்கள் பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தி இவரிடம் எந்திரங்களை வாங்க தொடங்கினர்.
இன்று உத்பால் மிஸ்திரி ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். மேலும் அவர் நாட்டின் வைர தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான நிபுணர்களில் ஒருவராக விளங்குகிறார். நாட்டின் முன்னணி வைர நிறுவனங்களில் ஒன்றான லெக்ஸஸ் சாப்ட்மேக் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இவரது சகோதரர்கள் ஜனக் மிஸ்திரி மற்றும் கமல் மிஸ்திரி ஆகியோர் அந்நிறுவனத்தில் சி.இ.ஓ. மற்றும் சி.ஓ.ஓ.வாக உள்ளனர். அந்த சூரத் தொழிலதிபர் பரிசாக அளித்த வைரம் பதித்த கிரிக்கெட் மட்டையை விராட் கோலி ஏற்றுக் கொண்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications