உத்தரபிரதேசம்: இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டைகளை நிறுவுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றின் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உற்பத்தி 1.27 ட்ரில்லியன் ரூபாய் என்ற அளவை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட 25,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகியுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக லக்னோ, கான்பூர், ஜான்சி, மற்றும் ஆக்ரா ஆகிய மாவட்டங்களில் இவை அமைய உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தில் சுமார் 40,000 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக கூடும் என தெரிகிறது. இதன் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உள்ளது.
கான்பூர் மாவட்டத்தில்தான் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக தெரிகிறது. அதாவது இங்கே பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பொருட்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 218 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே ஐந்து நிறுவனங்கள் தங்களது ஆலைகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளன.
அதானி குழுமம் கான்பூரில் வெடிப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை பிப்ரவரி மாதத்திலேயே செயல்படுத்த தொடங்கிவிட்டது. இதற்காக 1500 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. அடுத்ததாக மாடர்ன் மெட்டீரியல் அண்ட் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ராணுவ வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவியுள்ளது இதற்காக 38 கோடி ரூபாயை இது முதலீடு செய்துள்ளது.
நேத்ரா குளோபல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆனந்த் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களும் சுமார் 4000 கோடி மதிப்பில் இங்கே தங்களது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன. எனவே கான்பூர் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் உத்திரபிரதேச அரசு 62 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுவரை 210 ஏக்கர் நிலங்கள் பல்வேறு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தமாக 154 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்கின்றனர். மேலும் 40 நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 8,000 கோடி ரூபாய் முதலீடு இங்கே வரும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications