இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு 1.36 பில்லியன் டாலர் அதாவது 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், வேக்சின் வாங்குவதற்காகப் பைசர் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் தயாரிக்கும் இந்திய நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பிரேசில் நாட்டை விடவும் அதிக மக்களைத் தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதே நிலையில் வேக்சின் தட்டுப்பாடு காரணமாக அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம்
உத்தரப் பிரதேச மாநில அரசு தற்போது சீரம், பார்த் பயோடெக், கேட்லியா, ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக் வி வேக்சின் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி லேப்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் pre-bid பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
விரைவில் வேக்சின்
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியைத் துவங்கிய உடனேயே உத்தரப் பிரதேச மாநிலம் வேக்சினை பெற உள்ளது. ஆனால் இதுநாள் வரையில் இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் மட்டுமே வேக்சினை தயாரித்து வருகிறது.
பணம் ஒரு பிரச்சனையே இல்லை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் திட்டம் குறித்துப் பேசிய உயர் அதிகாரியான செகல் கூறுகையில், பணம் ஒரு பிரச்சனையே இல்லை, எங்களிடம் பெரிய அளவில் பட்ஜெட் உள்ளது. குறைந்தது வேக்சினுக்காக 10000 கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
24 கோடி மக்கள்
பிற துறைகளின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ள நிதியை 24 கோடி மக்களுக்கு வேக்சின் அளிப்பதற்காகச் செலவு செய்ய அரசு முடிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் என ரெயூட்டர்ஸ் செய்தி கூறுகிறது.


Click it and Unblock the Notifications