அட, ராமர் கோயிலை விடுங்கப்பா.. இந்தியாவிலேயே முதல் AI நகரம் வருது.. உத்தரபிரதேச அரசு மெகா திட்டம்..!

நாடே அயோத்தி பற்றித்தான் பேச்சி வரும் வேளையில் உத்தரபிரதேச மாநில அரசு ஒருபக்கம் சுற்றுலாத் துறை, போக்குவரத்துத் துறையை மேம்படுத்தி வரும் இதேவேளையில் உற்பத்தி மற்றும் ஐடி/டெக் சேவை துறையை மேம்படுத்தத் திட்டமிட்டு அதற்காகப் பணியாற்றி வருகிறது.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரமாக லக்னோ உருவாக்கப்பட உள்ளது, உத்தரப்பிரதேச அரசு, மாநிலத் தலைநகரான லக்னோ-வை AI நகரமாக மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் புதிய ஐடி ஹாப் ஆக நவாப்களின் நகரமான லக்னோ-வின் நாதர்கஞ்சில் உருவெடுக்க உள்ளது.

அட, ராமர் கோயிலை விடுங்கப்பா.. இந்தியாவிலேயே முதல் AI நகரம் வருது.. உத்தரபிரதேச அரசு மெகா திட்டம்..!

2030 ஆம் ஆண்டில், இது உலகப் பொருளாதாரத்திற்குச் சுமார் 15.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி பங்கீட்டை AI துறை சேவைகள் பங்களிக்கும் என்று சந்தை ஆய்வுகள் கூறும் வேளையில், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஜிடிபியில் சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பீட்டை AI சேர்க்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாபெரும் வளர்ச்சியில் பெரும் பங்கீட்டை உத்தரபிரதேச மாநில அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் லக்னோ-வை AI நகரமாக மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

AI மற்றும் MedTech போன்ற துறைகளில் CoE மையங்கள் லக்னோவில் அமைந்துள்ளன. பதினைந்துக்கும் மேற்பட்ட AI/ML ஸ்டார்ட்-அப்கள் AI COE ஆல் ஆதரிக்கப்பட்ட நிறுவனங்கள் IIT லக்னோவில் அமைந்துள்ளது.

லக்னோ-வின் நாதர்கஞ்சில் பகுதியில் அமைக்கப்பட உள்ள ஏஐ சிட்டி திட்டத்தின் முதல் கட்டத்தில், 40 ஏக்கர் நிலப்பரப்பில் AI அடிப்படையிலான சைபர் சிட்டிக்கான கட்டுமானம் நடைபெறும்.
இந்தத் திட்டமானது IT நிறுவனங்களுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட கிரேடு-A சான்றளிக்கப்பட்ட அலுவலக இடங்கள், அதிநவீன தரவு மையங்கள், கிரேடு-A நெகிழ்வான பணியிடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆகியவற்றை அமைக்கப்பட உள்ளது.

லக்னோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள நாடர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இந்த AI CITY அமைப்பதற்கான நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐடி பார்க், ஐடி சிட்டி அமைக்கப் பல சலுகைகளும், நிதி ஆதரவுகளையும் கட்டுமான நிறுவனங்களுக்கு உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச அரசு தமிழ்நாட்டைப் போலவே 1 டிரில்லியன் டாலர் பொருளாதார அளவீட்டை தொட வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கும் லக்னோ ஏஐ நகரத்திற்கும் வெறும் 140 கிலோமீட்டர் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+