இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கு இணையாகவோ அல்லது போட்டிப்போடும் அளவிலோ இல்லை. ஆனால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இப்படியிருக்கும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது பொருளாதார ஆராய்ச்சி துறை SBI Ecowrap முக்கிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.
SBI Ecowrap வெளியிட்டுள்ள அறிக்கையில் 2028 ஆம் நிதியாண்டுக்குள் இந்தியா, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என கணித்துள்ளது. 2014 ஆம் நிதியாண்டில் உலக பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 2023 வெளியான பொருளாதார தரவுகள் படி 2028 ஆம் நிதியாண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் பின்னுக்குத்தள்ளி 3வது இடத்திற்கு உயரும் என தெரிவித்துள்ளது.
தற்போது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 0.75 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும். இது தொடரும் பட்சத்தில் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 20 டிரில்லியன் டாலராக உயர உள்ளது என SBI Ecowrap வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதோடு 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இரு மாநிலங்கள் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி-யை பெறும் என அறிவித்துள்ளது. 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உலகின் 3வது இடத்தை பிடிக்கும் வேளையில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் ஜிடிபி 500 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருவிரு மாநிலங்கள் மட்டுமே 1 டிரில்லியன் டாலர் பங்கீட்டை பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 2027ல் இந்தியாவில் பல மாநிலங்களின் ஜிடிபி, வியட்நாம், நார்வே போன்ற பல நாடுகளின் ஜிடிபி-யை காட்டிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் SBI Ecowrap தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டை கொண்டு இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு வேகமாக வளரும் மாநிலங்களும் GSDP தரவில் முன்னோடியாக இருக்கும் வேளையில் 500 பில்லியன் மதிப்பீட்டை முதலில் அடைவது உத்தரபிரதேசமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 வருடமாக தமிழ்நாட்டை போலவே உத்தர பிரதேசமும் 1 டிரில்லியன் டாலர் கனவுடன் இயங்கி வருகிறது, இதற்கு ஏற்றார் போல் பல நிறுவனங்கள் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்திற்கு மத்தியில் பெரும் போட்டி இருந்த நிலையில் SBI Ecowrap ஆய்வுகள் 2027 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசம் 500 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடையும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு 2030க்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications