கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவு உறுதியாக இருந்தால் எதையும் கற்று எல்லையற்ற வாய்ப்புகளை சந்திக்கலாம். ஜெயிக்கலாம். அப்படியொரு சிந்தனையால் ஜெயித்த மனான் அகர்வால் என்பவர் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே உள்ள பகவான்பூரைச் சேர்நதவர் மனான் அகர்வால். பிடெக் பட்டதாரி, கோவிட் லாக்டவுன் வந்தபோது வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு எப்போதும் மனதுக்குள் இருக்கும் விவசாயத்தின் மீது கவனத்தை செலுத்தினார்.

தனது குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் அவர் பூக்களை சாகுபடி செய்ய முடிவு செய்தார். 2022இல் பகவான்பூரில் கூடுதலாக நிலத்தை வாங்கி அதில் பூக்களை சாகுபடி செய்தார்.
தொடக்கத்தில் அவருக்கு மலர் சாகுபடி கண்ணைக்கட்டி விட்டபடி இருந்தது. தனது நிலத்தில் விதவிதமான பூக்களை நட்டு வளர்த்தார். ஆரம்பத்தில் அவர் எதிர்பார்த்த விளைச்சலும் லாபமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் விவசாயத்தை தொடர்ந்தார்.
இந்தநிலையில் தேசிய தோட்டக்கலை வாரியத்தில் கிடைக்கும் நிதியுதவி பற்றி அறிந்தார். இதுபற்றி வாரியத்தை தொடர்பு கொண்ட மனான் அகர்வால் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் 2023இல் தனது நிலத்தில் ஒரு பாலிஹவுஸை நிறுவினார். அதில் கெர்பெரா மலர்களை நட்டார். அவரது அயராத முயற்சியில் நல்ல தரமான கெர்பெரா மலர்கள் விளைந்தன. 2023 பிப்ரவரியில் அவர் 6 வண்ணங்களில் கெர்பெரா மலர்களை விளைவித்தார். தினமும் 3500 பூக்களை அறுவடை செய்தார். ஒரு மலர் ரூ.3க்கு விற்றது.
2023-24 நிதியாண்டில் அவர் மொத்தம் ரூ.37,80,000. வருமானத்தைப் பெற்றார். இதில் ரூ.10,00,000 செலவு போக ரூ.27 லட்சம் லாபம் பார்த்தார். இதனிடையே மனான் அகர்வால் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியத்துடனான கடனாக ரூ.25.08 லட்சத்தைப் பெற்றார். இது அவரது தொழிலுக்கு மிகுந்த உதவியாக இருந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மலர் சாகுபடியில் வெற்றிகரமான விவசாயியாக மனான் அகர்வால் உருவெடுத்தார். விவசாயம் தவிர மனான் அகர்வால், டேராடூனில் ஒரு தொடக்கப்பள்ளியை நிறுவினார். கோவிட் காலத்தின்போது கிடைத்த வாய்ப்பை வைத்து அவர் விவசாயத்தில் நவீன உத்திகளை கையாண்டு நல்ல லாபத்தை பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்குப் பெற்றுத் தந்தார்.
மனான் அகர்வாலின் வெற்றிக்கதை பல விவசாயிகளுக்கு உத்வேகத்துக்கு அடித்தளமாக அமைந்தது. ஒரு இன்ஜினியர் என்ற நிலையில் இருந்து விவசாயி ஆக மாறி கடின உழைப்புடன் அர்பணிப்போடு தொழில் செய்து வெற்றி பெற்றது எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications