1 லட்சம் பணம், 400சதுரடி அலுவலகத்தில் துவங்கிய VGuard.. இன்று மாபெரும் வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக விவசாய குடும்பத்தில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வேலைவாய்ப்புகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள், இது விவசாயிகள் குடும்பத்தில் இருக்கும் அடிப்படை மனநிலையாகவே இருக்கிறது.

இன்று பல தடைகளை உடைத்து கல்வியும் அனுபவமும் கொடுக்கிறது நம்பிக்கை விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களை அனைத்து துறையிலும் சாதிக்க வைத்துள்ளது.

ஆனால் 1970களில் 80களில் 99 சதவீத விவசாய குடும்பங்களின் மனநிலை முதலில் கூறியது போல தான், அதில் ஒருவர் தான் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி மற்றும் அவரது சந்தை தாமஸ். யார் இந்த கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி ..?

 தள்ளுவண்டியில் டீ கடை திறந்த பிடெக் பட்டதாரிகள்.. சூடுபிடிக்கும் விற்பனை..! தள்ளுவண்டியில் டீ கடை திறந்த பிடெக் பட்டதாரிகள்.. சூடுபிடிக்கும் விற்பனை..!

கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி

கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி

1977ல் பட்டப்படிப்பு பிடித்து முடித்த கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி தனது தந்தை தாமஸ்-யிடம் புதிதாக பிஸ்னஸ் செய்ய 1 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்கும்போது, அவருடைய பதில் என்ன தெரியுமா..? தடையற்ற, நிச்சயமற்ற மற்றும் பெரும்பாலும் இருண்ட வணிக உலகத்திற்குள் செல்ல வேண்டாம், வங்கித் துறையிலோ அல்லது கல்லூரி பேராசிரியர் ஆகவோ பணியாற்ற கட்டளையிட்டார்.

கேரளா

கேரளா

கேரள மாநிலத்தின் திருச்சூர் டவுன் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் தான் பரப்பூர். இதுதான் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி மற்றும் அவரது சந்தை தாமஸ்-க்கு பூர்வீகம், பரம்பரை பரம்பரையாக விவசாய குடும்பம். ஒரு விவசாய தந்தையின் மகனின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்படியொரு சொல்வதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை, அதுவும் 1977ல்..

400 சதுர அடி அலுவலகம்

400 சதுர அடி அலுவலகம்

ஆனால் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி-க்கு கதை இதில் இருந்து தான் மாறியது என்றால் மிகையில்லை. வீட்டில் இருக்கும் வழக்கமான தடை, அதட்டல் மத்தியில் மன உறுதியுடன் கொச்சியில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள 400 சதுர அடி கொட்டகையில் தனது நிறுவனத்தைத் துவங்கினார் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி.

கேரள மின்சாரம்

கேரள மின்சாரம்

அப்போது, ​​கேரளாவில் மின்சாரம் விநியோகத்தில் வோல்டேஜ் தாறுமாறாக ஒழுங்கற்றது இருந்தது. நாள் முழுவதும் மின்சாரத்தில் மின்னழுத்த ஏற்ற இறக்கங்களுடன் இருந்த காரணத்தால் இயல்பு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தது. "கேரள மாநில மின்சார வாரியத்தின் (KSEB) பலவீனம், புதிதாக நிறுவப்பட்ட எங்கள் வணிக நிறுவனங்களின் பலமாக மாறியது" என்கிறார் கோச்சௌஸ்ஃப்.

வோல்டேஜ் ஸ்டெபிலைசர்

வோல்டேஜ் ஸ்டெபிலைசர்

மூன்று-நான்கு பணியாளர்களைச் சேர்த்துக் கொண்டு சிறிய முயற்சியாகத் துவங்கப்பட்ட 400 சதுரடி அலுவலகத்தில் மின்னழுத்த பிரச்சனைகளைச் சரி செய்யும் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் அசம்பிள் செய்ய துவங்கினார் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி.

 அத்தியாவசியம்

அத்தியாவசியம்

70 களின் பிற்பகுதியிலும் 80 களின் முற்பகுதியிலும் கேரள மாநிலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை ஒரு அட்டகாசமான வணிகமாக இருந்தது. மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நீடித்தாலும், இதை சரி செய்ய அனைவருக்கும் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் அவசியமாக இருந்தது.

வர்த்தகம் சூடுபிடித்தது

வர்த்தகம் சூடுபிடித்தது

மின்னழுத்த ஏற்ற இறக்கங்களால் டி.வி., ஃப்ரிட்ஜ் அல்லது மியூசிக் சிஸ்டம் அடிபடும் போதெல்லாம், வாடிக்கையாளரின் மனதில் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் தேவை என்ற மனநிலை வலுப்பெற்றது. இதனால் VGuard நிறுவனத்தின் வோல்டேஜ் ஸ்டெபிலைசர்-கள் சில வாரங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

விலை

விலை

மேலும் VGuard வோல்டேஜ் ஸ்டெபிலைசர் விலை, விலையுயர்ந்த வீட்டு உபகரணங்களில் விலையில் சிறு பகுதியாகவே இருந்த காரணத்தால் அனைவரும் வாங்க துவங்கினர். KSEB இன் பலவீனம் V Guard Industries இன் பலமாக மாறியது. மேலும், வியாபாரம் நன்றாக இருந்தது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

VGuard நிறுவனத்தின் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் உற்பத்தியை அதிகரிக்க அடுத்தடுத்து உற்பத்தி தளங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்தார் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி. இதன் படி கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி தளம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் வர்த்தகம்

இந்தியா முழுவதும் வர்த்தகம்

இன்று VGuard நிறுவனம் நாடு முழுவதும் 29 கிளைகள், 624 வினியோகஸ்தர்கள், 5562 சேனல் பார்ட்னர்கள் மற்றும் 25,000 சில்லறை விற்பனையாளர்களின் வலுவான நாடு தழுவிய விநியோகத்தையும் கொண்டுள்ளது. மேலும் 3,500 நேரடி ஊழியர்களைக் கொண்டுள்ளது முக்கியமானது.

3,498 கோடி வருவாய்

3,498 கோடி வருவாய்

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, 2021-22ல், VGuard நிறுவனம் விற்பனை மூலம் வருவாய் ரூ.3,498 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் என்றாலே VGuard தான் என்ற நிலை உருவாகியது மட்டும் அல்லாமல் மின்அழுத்த பிரச்சனைகள் தீர்ந்த பின்பும் வர்த்தகம் தொடர்ந்து இருந்தது.

 கிராமம் மற்றும் டவுன் பகுதி

கிராமம் மற்றும் டவுன் பகுதி

மக்கள் எந்த விலையுயர்ந்த பொருட்களை வாங்கினாலும் VGuard வோல்டேஜ் ஸ்டெபிலைசர் வாங்குவது தவறுவது இல்லை, இன்றளவும் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் மக்கள் கேட்டு வாங்கும் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் ஆக VGuard வளர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

20 சதவீத வர்த்தகம்

20 சதவீத வர்த்தகம்

இன்றளவும் VGuard நிறுவனம் வோல்டேஜ் ஸ்டெபிலைசர் வர்த்தக பிரிவில் 20 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. ஆனால் 90களில் துவக்கத்தில் எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆதிக்கம் அதிகரித்தது, பல மாற்றங்கள் எலக்ட்ரிக்கல் கருவிகளிலும் வந்தது. இதை சுதாரித்துக்கொண்ட கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி புதிய வர்த்தக துறைக்குள் இறக்கினார்.

வி ஸ்டார் கிரியேஷன்ஸ்

வி ஸ்டார் கிரியேஷன்ஸ்

1995 ஆம் ஆண்டில், வி ஸ்டார் கிரியேஷன்ஸ் ஒரு ஆயத்த ஆடை பிராண்டை உருவாக்கி ஆடை தயாரிப்பாளராகத் தனது பயணத்தை Vgaurd-ன் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி தொடங்கினார். அடுத்த சில வருடத்திலேயே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான லைப்ஸடை்ல தயாரிப்புகளையும், உள்ளாடைகள் தயாரிப்புகளிலும் இறங்கியது.

142 கோடி ரூபாய் விற்றுமுதல்

142 கோடி ரூபாய் விற்றுமுதல்

வோல்டேஜ் ஸ்டெபிலைசர் வர்த்தகத்தை எப்படி நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டதோ வி ஸ்டார் கிரியேஷன்ஸ் வர்த்தகத்தையும் கேரளா, தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.மார்ச் 2022ல் வி ஸ்டார் கிரியேஷன்ஸ் சுமார் 142 கோடி ரூபாய் விற்றுமுதல் பெற்றுள்ளது.

Wonderla

Wonderla

இதற்கிடையில் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி-க்கு 2000 ஆம் ஆண்டில் வாட்டர் தீம் பார்க் மீதான ஈர்ப்பு உருவானது. ஆரம்பத்தில் veegaland என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வாட்டர் தீம் பார்க்குகள் பின்னாளில் Wonderla என பெயர் மாற்றப்பட்டு கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் என 3 மாநிலத்தில் தீம் பார்க் வைத்துள்ளது. இப்பிரிவு வர்த்தகத்தில் 2020 ஆம் ஆண்டில் 282 கோடி ரூபாயாக உள்ளது.

மிதுன் மற்றும் அருண் சிட்டிலப்பில்லி

மிதுன் மற்றும் அருண் சிட்டிலப்பில்லி

கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி தற்போது தனது மகனான மிதுன் சிட்டிலப்பில்லி மற்றும் அருண் சிட்டிலப்பில்லி ஆகியோர் உடன் Vgaurd சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்து வருகிறார். மிதுன் சிட்டிலப்பில்லி Vgaurd இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தையும், அருண் சிட்டிலப்பில்லி Wonderla நிறுவனத்தையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

அடடே இவரும் வாங்கிட்டாரா... கேரளா ரவி பிள்ளை கலக்கல்..! அடடே இவரும் வாங்கிட்டாரா... கேரளா ரவி பிள்ளை கலக்கல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

V Guard Kochouseph Chittilappilly With Rs 1 lakh, 400 sq feet shed turned into business empire

V Guard Kochouseph Chittilappilly With Rs 1 lakh, 400 sq feet shed turned into business empire 1 லட்சம் பணம், 400சதுரடி அலுவலகத்தில் துவங்கிய VGuard.. இன்று மாபெரும் வளர்ச்சி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X