சில காலமாக இணையவாசிகளிடையே ஒரு விஷயம் பேசு பொருளானது. அது என்னவென்றால் "ஒரே கனவு என்றால் அது விஷால் மேகா மார்ட்டின் செக்யூரிட்டி கார்ட் ஆவதுதான்" என்ற மீம்ஸ்கள் பரவலாக பகிரப்பட்டது. இதற்கு காரணம் ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று நிறுவனம் செக்யூரிட்டி கார்டு சேவைக்காக ஒரு தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வில் நடப்பு நிகழ்வுகள், ஆங்கிலம், உள்ளூர் மொழிக் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. ஏற்கனவே காவல்துறையில் பணிபுரிந்தவர்களுக்கும், துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்றவர்களுக்கும், தற்காப்பு கலை உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால் உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் பலர் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால் 1 சதவீத பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். ஏற்கனவே அரசாங்க பணிகளுக்காக நடக்கும் தேர்வுகளை விட இந்தத் தேர்வு மிகவும் சவாலானதாக அமைந்தது. இதுதான் நெடிசன்களிடையே ஏற்பட்ட ஹைப்பிற்கு காரணம்.

சமூக ஊடகங்களில் பரவும் இந்த ஹைப்களுக்கு மத்தியில், விஷால் மெகா மார்ட் நிறுவனம் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் ஒரு பெரும் விளம்பரத்தைப் பெற்று, வாடிக்கையாளர்களிடையே அதன் பிராண்ட் மதிப்பையும், இமேஜையும் உயர்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் X பதிவுகளில் நகைச்சுவையான கருத்துக்கள் பரவத் தொடங்கியது. சிலர் விஷால் மேகா மார்ட் செக்யூரிட்டி கார்டு ஆவதற்கு யுபிஎஸ்சி, நீட் போன்ற தேர்வுகளுக்கு கடுமையாக உழைப்பதை போல உழைக்க வேண்டும் என்று கிண்டலாகக் கூறியிருந்தனர்.
இப்படி ஒரே ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தை வைத்தே பிரபலமான பிராண்டுக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? விஷால் மெகா மார்ட்டின் நிறுவனரான ராம் சந்திர அகர்வால் ஆரம்பத்தில் ஒரு ஆடை விற்பனையாளராகத் தான் இருந்தார். எந்த விதமான பட்டமும், பெற்றோரின் வலுவான பின்புலமும் இல்லாமல் இருந்ததால் தனது கனவை மட்டுமே நம்பி உழைக்கத் தொடங்கினார்.
உள்ளூர் வணிகங்கள் மற்றும் கடைகளுக்கு ஆடைகளை விற்று அதன் மூலம் தனது தொழிலை நடத்தி வந்தார். 2001-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஆடை மற்றும் தினசரி தேவைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வழங்கும் சில்லறை வர்த்தகத்தை தொடங்கினார். இவருடைய வணிகம் நாட்டில் முதன்முதலாக தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் வணிகமாக மாறியது.
இவருடைய வணிகம் வேகமாக வளர்ந்ததால் இந்தியாவில் 170-க்கும் மேற்பட்ட விஷால் மெகா மார்ட் கடைகளைத் திறந்தார். 2008 முதல் 2009-ஆம் ஆண்டில் அதிகரித்த கடன்கள் மற்றும் மோசமான நிதி மேலாண்மை காரணமாக விஷால் மேகா மார்ட் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்தது. இது அகர்வாலின் வெற்றிக்கு ஒரு தடையாக அமைந்தது. இறுதியாக திவால் நிலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
2011-ஆம் ஆண்டில் டிபிஜி மற்றும் ஸ்ரீராம் குழுமத்திற்கு விஷால் மேகா மார்ட் விற்பனை செய்யப்பட்டது. இனிமேல் இந்த வணிகம் தொடராது என்று பலரும் நினைக்கையில் மீண்டும் விஷால் V2 ரீடைல் லிமிடெட் எனப்படும் மற்றொரு ரீடைல் செயின் வணிகத்துடன் அகர்வால் திரும்பி வந்தார்.
அவர் தனது நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட அனைத்து அனுபவங்களையும் வைத்து வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் வெகுவிரைவில் V2 ரீடைல் லிமிடெட் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
V2 ரீடைல் லிமிடெட் இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிடபட்ட நிறுவனமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் மே 21-ஆம் தேதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 6,530 கோடி. முதலில் விஷால் மெகா மார்ட்டை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் மீண்டும் மனம் தளராது தனது வணிகத்தில் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்று ரூ. 6,530 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications