இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் சமீபத்தில் பார்மா துறையைத் தாண்டி நிதியியல் துறைக்குச் செல்ல துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விற்பனை மற்றும் ஏற்றுமதி வாயிலாக மட்டுமே பல பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும் எனக் கணிப்புகள் வெளியாகியிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் தலைவரான ஆதார் பூனவல்லா பாலிசி பஜார் நிறுவனத்தைப் பங்குகளை வாங்க முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
பாலிசிபஜார் பங்கு விற்பனை
ஐபிஓ வெளியிடக் காத்திருக்கும் பாலிசிபஜார் நிறுவனத்தின் முதலீட்டாளரான True North என்னும் முதலீட்டு நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கையில் இருந்த பங்குகளைச் சுமார் 5 நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளது பாலிசிபஜார் நிர்வாகம். மேலும் பங்கு மற்றும் பங்கு விற்பனைத் தொகை குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
5ல் ஒன்று சீரம் இன்ஸ்டியூட்
சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்படும் பாலிசிபஜார் நிறுவனம் தற்போது True North கையிருப்பில் இருந்த பங்குகளைச் சீரம் இன்ஸ்டியூட், அசோகா இந்தியா ஈக்விட்டி இண்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ட்ரையம்ப் குளோபல் ஹோல்டிங்க்ஸ், IIFL ஸ்பெஷல் Opportunities Fund Series 8 மற்றும் இந்தியா ஆகார்ன் பன்ட் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளது.
மேக்மா பின்கார்ப் பங்குகள்
இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு மருத்துவத் துறையைத் தொடர்ந்து நிதியியல் சேவை துறையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான பூனாவாலா குரூப் மேக்மா பின்கார்ப் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைச் சுமார் 3,456 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
பூனாவாலா பைனான்ஸ் விரிவாக்கம்
மேக்மா பின்கார்ப் பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் பூனாவாலா குரூப்-ன் நிதி சேவை பிரிவான பூனாவாலா பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும். பூனாவாலா பைனான்ஸ் தற்போது கார்ப்பரேட் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே நிதி சேவை அளித்து வருகிறது.
புதிய காஸ்ட்லியான வீட்டு
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் அமைப்பாக விளங்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆதார் பூனவல்லா சில நாட்களுக்கு முன்பு தனது புதிய வீட்டின் மூலம் தலைப்புச் செய்தியாக மாறினார்.
மாதம் 2 கோடி ரூபாய் வாடகைக்கு
உலகின் மிகவும் காஸ்ட்லியான குடியிருப்புப் பகுதியாக விளங்கும் லண்டன் மேஃபேர் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டிற்கு வாரம் 69,000 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் வாரம் 50 லட்சம் ரூபாய், அதாவது மாதம் 2 கோடி ரூபாய் வாடகைக்கு ஆதார் பூனவல்லா குடியேறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications