தெருவோரக்கடை நடத்தி அதன் மூலம் லட்சங்களில் சம்பாதிப்பவர்களின் கதைகள் குறித்து கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக இன்றும் ஒரு வடா பாவ் விற்பனையாளரை பற்றி தான் பார்க்க உள்ளோம். மும்பையைச் சேர்ந்த தெருவோர விற்பனையாளர்கள் பொறியியல் படிப்புகள் அல்லது MBA போன்ற பட்டப்படிப்புகளுடன் தள்ளுவண்டி கடையை நடத்தி அதன் மூலம் நல்ல வருமானத்தை பெறுகின்றனர். அதேபோல மும்பையை சேர்ந்த ஒரு வடா பாவ் வியாபாரி ஆண்டுக்கு 24 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அவருடைய சுவாரசியக் கதை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சர்தக் சச்தேவா என்ற வீலாகர் வெளியிட்ட வைரல் வீடியோ இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் வடா பாவ் விற்பனை செய்து எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. சச்தேவா ஒரு உள்ளூர் வடா பாவ் கடையில் ஒரு நாள் வேலை செய்யும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் முடிவுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் அந்த வடா பாவ் விற்பனையாளரின் ஒரு நாள் வருமானம் பலரும் நினைப்பதை விட அதிகமாக உள்ளது.

சர்தக் சச்தேவாவின் வீடியோ 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும் அந்த வீலாகர் ஒருநாள் செலவழித்த தனது அனுபவத்தை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து பதிவிட்டுள்ளார். வீடியோவில் அவர் புதிய வடா பாவ்களை தயாரிப்பது, வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது என அனைத்தையும் படம் பிடித்துள்ளார். அதில் அவர் காலை முடிவதற்குள் சுமார் 200 வடா பாவ்களை விற்று விட்டோம் என்றும் குறிப்பிடுகிறார். இப்படியே மொத்தம் 622 வடா பாவ்கள் விற்பனையானதும் நமக்கு தெரிய வருகிறது. ஒவ்வொரு வடா பாவ்வின் விலையும் 15 ரூபாய். ஆக அன்றைய மொத்த வருமானம் 9,300 என்பதும் விடீயோவின் மூலம் நமக்கு தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 9,300 ரூபாய் எனில் மாதம் முழுவதும் வடா பாவ் விற்பனை செய்தால் 2.8 லட்சம் ரூபாயை சம்பாதிக்கலாம். அதாவது இது சுமார் 3300 டாலர்கள். மற்ற செலவுகளை எல்லாம் கழித்த பின்னர் அந்த வடா பாவ் விற்பனையாளர் மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் அல்லது ஒரு ஆண்டுக்கு 24 லட்சம் வரை வருமானம் பெற முடியும். இந்த வருமானம் இந்தியாவில் பிற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளத்தை விட மிக அதிகம், இந்த வீடியோவை சச்தேவா பகிர்ந்ததிலிருந்து நெட்டிசன்கள் பலவகையான கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் "இந்தப் பணம் எளிதாக வருவது போல தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் தீவிர உழைப்பு யாருக்கும் தெரிவதில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் "இதுதான் இந்தியாவின் கல்வி முறையை வெற்றிகரமாக வறுத்து எடுப்பது" என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார். மூன்றாவது ஒரு நபர் 90 சதவீத பட்டாதாரிகளுக்கு மேல் இவர் சம்பாதிக்கிறார் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் "இந்த அண்ணன் என் வேலையை விட்டுவிட தூண்டுகிறார்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications