நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் அதிகம் பேசப்படும் ஒரு பெயர் வைபவ் சூர்யவன்சி. இந்திய கிரிக்கெட் உலகின் வளரும் சூப்பர் ஸ்டார். விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று நாடே உற்றுநோக்கும் கிரிக்கெட் வீரராக தன்னை நிலைநிறுத்து கொண்டுள்ளார்.ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வண்ணமே இருக்கிறது. அந்த அளவுக்கு பிக் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் திகழ்கின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக மாறி வருகிறார் வைபவ் சூர்யவன்சி. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வைபவ் சூர்யவன்சி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளார். நேற்று நடந்த போட்டியில் கூட பெங்களூர் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதற்கு வைபவ் சூர்யவன்சி தான் முக்கிய காரணமாக இருந்தார்.

26 பந்தில் 78 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்சி 15 வயதிலேயே ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் சமஷ்டிபூர் என்ற இடத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தவர் வைபவ் சூர்யவன்சி. இவருக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது இவர் விளையாடி வருகிறார்.
இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்று அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் கால்பதித்தவர். இவர் இதுவரை டி20 போட்டிகளில் மட்டும் 753 ரன்களை குவித்திருக்கிறார். சிறுவயதிலேயே இவருக்கு கிரிக்கெட் ஆர்வம் உண்டு. இவரின் தந்தை ஒரு விவசாயி. மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்து வீட்டிற்கு அருகிலேயே பயிற்சி செய்வதற்கான இடத்தை அமைத்து தந்தார்.

இதன் பின்னர் சமஸ்டிபூர் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்ற வைபவ் சூர்யவன்சி. 8 வயது முதலே முறையான பயிற்சி பெற்ற வைபவ் முதலில் 12 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பீகார் அணியில் விளையாடினார். பின்னர் 2024ஆம் ஆண்டு அதாவது 13 வயதிலேயே ஐபிஎல் போட்டியில் கால்பதித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார்.
13 வயசு பையனால இவ்வளவு பெரிய வீரர்களை என்ன செய்ய முடியும் என அனைவரும் பேசிய நிலையில் பந்துவீச்சாளர்களை எல்லாம் திக்குமுக்காட வைத்து அடடா செமையா விளையாடுறாரே என ஆச்சர்யப்பட வைத்தார். தற்போது 15 வயதாகும் வைபவ் சூர்யவன்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு உள்ளதாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 1.1 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.
விரைவில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார், சச்சின், விராட் கோலியை போல பெஸ்ட் பேட்ஸ்மேனாக வருவார் என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும் என்றும் மும்பை இவரை வாங்க திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications

